ரூ.40 லட்சம் பட்டாசுகள் பறிமுதல் : சிவகாசி குடோனுக்கு சீல்
ரூ.40 லட்சம் பட்டாசுகள் பறிமுதல் : சிவகாசி குடோனுக்கு சீல்
ரூ.40 லட்சம் பட்டாசுகள் பறிமுதல் : சிவகாசி குடோனுக்கு சீல்
ADDED : ஜூலை 24, 2011 03:46 AM

சிவகாசி : சிவகாசி அருகே அனுமதி இல்லாமல் குடோனில் பதுக்கிய, 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
சிவகாசி மினி ஸ்டேடியம் அருகே மாரிமுத்து மனைவி விஜயலட்சுமிக்கு சொந்தமான குடோனில் அனுமதியின்றி பட்டாசு இருப்பு வைத்திருப்பதாக நஷ்மல்கோதா எஸ்.பி., க்கு புகார் சென்றது. சோதனை நடத்த எஸ்.பி., உத்தரவிட்டதை தொடர்ந்து, ஸ்ரீவில்லிபுத்தூர் இன்ஸ்பெக்டர் மூக்கன், வேலுச்சாமி எஸ்.ஐ., துணை தாசில்தார் சங்கரபாண்டியன் மற்றும் அதிகாரிகள் குடோனை சோதனையிட்டனர். 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான பலவகை பட்டாசுகள் அனுமதியின்றி பண்டல், பண்டலாக வைத்திருந்ததை கண்டனர். விசாரணையில் சிவகாசி லாரி டிரான்ஸ்போர்ட் உரிமையாளர் சந்தோஷ் சேட் இருப்பு வைத்திருந்தது தெரியவந்தது. குடோனை வருவாய் துறையினர் பூட்டி சீல் வைத்தனர்.