/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ராஜகோபால சுவாமி கோவிலில் ஆடிப்பூரம் உற்சவம்ராஜகோபால சுவாமி கோவிலில் ஆடிப்பூரம் உற்சவம்
ராஜகோபால சுவாமி கோவிலில் ஆடிப்பூரம் உற்சவம்
ராஜகோபால சுவாமி கோவிலில் ஆடிப்பூரம் உற்சவம்
ராஜகோபால சுவாமி கோவிலில் ஆடிப்பூரம் உற்சவம்
ADDED : ஜூலை 24, 2011 10:39 PM
கடலூர் : புதுப்பாளையம் ராஜகோபால சுவாமி கோவிலில் ஆடிப்பூரம் உற்சவம் நேற்று துவங்கியது.கடலூர், புதுப்பாளையம் செங்கமல தாயார் சமேத ராஜகோபால சுவாமி கோவிலில் ஆடிப்பூரம் உற்சவம் நேற்று துவங்கியது.
10 நாட்கள் உற்சவத்தில் தினமும் காலை 9 மணிக்கு கோதாதேவியாகிய ஆண்டாளுக்கு திருமஞ்சனம் நடக்கிறது. மாலை 7 மணிக்கு ஆண்டாள் சிறப்பு அலங்காரத்தில் கோவில் புறப்பாடு நடக்கிறது.வரும் 2ம் தேதி காலை 8 மணிக்கு ராஜகோபால சுவாமிக்கும், ஆண்டாளுக்கும் விசேஷ திருமஞ்சனம் நடக்கிறது. மாலை இந்திர விமானத்தில் பெருமாள் ஆண்டாள் சகிதமாக சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடக்கிறது.ஏற்பாடுகளை கிருஷ்ணமூர்த்தி, பிரபு, நரசிம்மன் பட்டாச்சாரியார்கள், நிர்வாக அதிகாரி நாகராஜன் மற்றும் கோவில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.


