/உள்ளூர் செய்திகள்/கடலூர்/அனல்மின் நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த இடம்: ஆர்.டி.ஓ., பார்வைஅனல்மின் நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த இடம்: ஆர்.டி.ஓ., பார்வை
அனல்மின் நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த இடம்: ஆர்.டி.ஓ., பார்வை
அனல்மின் நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த இடம்: ஆர்.டி.ஓ., பார்வை
அனல்மின் நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த இடம்: ஆர்.டி.ஓ., பார்வை
பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை அருகே தனியார் அனல் மின் நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த இடங்களை ஆர்.டி.ஓ., இந்துமதி பார்வையிட்டார்.பரங்கிப்பேட்டை அடுத்த பஞ்சங்குப்பம், கரிக்குப்பம், புதுக்குப்பம் உள்ளடக்கி தனியார் அனல் மின் நிலையம் அமைக்கப்படுகிறது.
கூட்டத்தில் அனல் மின் நிலையம் அமைக்க கரிக்குப்பம் சாலையில் உள்ள பாலம் வழியாக டாரஸ் லாரியில் செம்மண் ஏற்றிச் செல்வதால் பாலம் பழுதடைந்துள்ளதாகவும், பக்கீம்காம் கால்வாயை உடைத்து பாதை அமைத்துள்ளதாகவும், கம்பெனிக்கு விற்பனை செய்யப்படாத விவசாய நிலத்திற்குச் செல்ல வழிவிடாமல் அடைத்து விட்டதாக பொதுமக்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது.அதையடுத்து நேற்று ஆர்.டி.ஓ., இந்துமதி, டி.எஸ்.பி., நடராஜன் ஆகியோர் கரிக்குப்பத்தில் உள்ள பாலம், விற்பனை செய்யாத விவசாய நிலங்கள், சுடுகாட்டு பாதை உள்ளிட்ட பிரச்னைக்குரிய இடங்களை பார்வையிட்டனர்.இதுகுறித்து மீண்டும் இன்று சமாதானக் கூட்டம் நடக்கிறது.


