Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ஆசிரியர்கள் பற்றாக்குறை பள்ளிக்கு பூட்டு போட முடிவு

ஆசிரியர்கள் பற்றாக்குறை பள்ளிக்கு பூட்டு போட முடிவு

ஆசிரியர்கள் பற்றாக்குறை பள்ளிக்கு பூட்டு போட முடிவு

ஆசிரியர்கள் பற்றாக்குறை பள்ளிக்கு பூட்டு போட முடிவு

ADDED : ஜூலை 24, 2011 10:43 PM


Google News

நெல்லிக்குப்பம் : முள்ளிகிராம்பட்டு பள்ளிக்கு போதுமான ஆசிரியர்களை நியமிக்கா விட்டால் பள்ளிக்கு பூட்டு போடும் போராட்டம் நடத்த பெற்றோர்கள் முடிவு செய்துள்ளனர்.நெல்லிக்குப்பம் முள்ளிகிராம்பட்டு நகராட்சி நடுநிலைப்பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் சங்க கூட்டம் நடந்தது.கவுன்சிலர் செல்வி, தலைவர் கொளஞ்சியப்பன், தலைமையாசிரியர் முத்தையன், ஆசிரியர் பயிற்றுனர் கஜேந்திரன் உட்பட ஏராளமான பெற்றோர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தில், ஒன்று முதல் ஐந்து வகுப்பு வரை உள்ள 120 மாணவ, மாணவிகளுக்கு இரண்டு ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர்.பள்ளிக்கு போதுமான ஆசிரியர்கள் இல் லாததால் மாணவர்களின் படிப்பு பாதிக்கப் பட்டுள்ளது.ஒரு வாரத்திற்குள் போதுமான ஆசிரியர்கள் நியமிக்காவிட்டால் பள்ளிக்கு பூட்டு போடும் போராட்டம் நடத்துவது என பெற்றோர்கள் முடிவு செய்துள்ளனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us