/உள்ளூர் செய்திகள்/கடலூர்/அடரி பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறை மாணவர்கள் கல்வி கற்பதில் சிக்கல்அடரி பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறை மாணவர்கள் கல்வி கற்பதில் சிக்கல்
அடரி பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறை மாணவர்கள் கல்வி கற்பதில் சிக்கல்
அடரி பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறை மாணவர்கள் கல்வி கற்பதில் சிக்கல்
அடரி பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறை மாணவர்கள் கல்வி கற்பதில் சிக்கல்
சிறுபாக்கம் : அடரி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஏழு ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதால், மாணவர்கள் கல்வி கற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.சிறுபாக்கம் அடுத்த அடரி கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது.
மேலும் பள்ளியில் குடிநீர், கழிவறை வசதி இல்லாததால் மாணவ, மாணவிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். சைக்கிள்களை நிறுத்த போதிய இடவசதி இல்லாமல் திறந்த வெளியில் சைக்கிள்கள் நிறுத்தப்படுவதால், வெயில் மற்றும் மழையில் சைக்கிள்கள் அடிக்கடி பழுதடைகின்றன.இதனால் நீண்ட தூரத்தில் இருந்து பள்ளிக்கு வரும் மாணவர்கள் வீட்டிற்கு திரும்பிச் செல்லமுடியாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஊரைவிட்டு ஒதுக்குப்புறமாக அமைந்துள்ள இப்பள்ளிக்கு வாட்ச்மேனும் இல்லாததால் இரவு நேரத்தில் பாதுகாப்பு இல்லை.மாவட்ட கல்வி நிர்வாகம் உடனடியாக காலிப் பணியிடங்களுக்கு ஆசிரியர்களை நியமித்து, பாதுகாப்பிற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


