Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/மருத்துவ முகாம்

மருத்துவ முகாம்

மருத்துவ முகாம்

மருத்துவ முகாம்

ADDED : ஜூலை 24, 2011 10:45 PM


Google News

கடலூர் : மருங்கூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.மருங்கூர் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் நடந்த முகாமிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் கலைச்செல்வி தலைமை தாங்கினார்.

உதவி தலைமை ஆசிரியர் ராஜலட்சுமி முன்னிலை வகித்தார். டாக்டர் பெரியநாயகி தலைமையிலான மருத்துவக் குழுவினர் 706 பேரை பரிசோதித்து சிகிச்சை அளித்தனர். அவர்களில் 30 பேர் மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்பட்டனர்.பள்ளியைச் சேர்ந்த 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. முகாமில் கண் மருத்துவ உதவியாளர் கொளஞ்சியம்மாள், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சிவப்பிரகாசம், மருத்துவம் சாரா மேற்பார்வையாளர் சிவராமன் உட்பட பலர் பங்கேற்றனர்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us