/உள்ளூர் செய்திகள்/கடலூர்/பரங்கிப்பேட்டை அருகே பல் இளிக்கும் சாலை பாதியிலேயே நிறுத்தப்பட்டதால் மக்கள் அவதிபரங்கிப்பேட்டை அருகே பல் இளிக்கும் சாலை பாதியிலேயே நிறுத்தப்பட்டதால் மக்கள் அவதி
பரங்கிப்பேட்டை அருகே பல் இளிக்கும் சாலை பாதியிலேயே நிறுத்தப்பட்டதால் மக்கள் அவதி
பரங்கிப்பேட்டை அருகே பல் இளிக்கும் சாலை பாதியிலேயே நிறுத்தப்பட்டதால் மக்கள் அவதி
பரங்கிப்பேட்டை அருகே பல் இளிக்கும் சாலை பாதியிலேயே நிறுத்தப்பட்டதால் மக்கள் அவதி
பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை அருகே 24 லட்சம் ரூபாய் செலவில் சாலை பணி துவங்கி பாதியிலேயே நிறுத்தப்பட்டதால் கரடு, முரடான சாலையில் பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவிகள் செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர்.பரங்கிப்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட மணல்மேடு - ஆயிபுரம் தார்சாலை கடந்த வெள்ளத்தின் போது சேதமடைந்தது.
கான்ட்ராக்ட் எடுத்தவர் முதல் கட்ட பணியாக சாலையை பொக்லைன் மூலம் முழுவதுமாக பெயர்த்து எடுத்தார். அடுத்ததாக சாலையை பணியை துவங்க ஜல்லி கொட்டப்பட்டதோடு சரி, பணி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. பெயர்த்து எடுத்த குண்டும், குழியுமான சாலையில் பள்ளிக்குச் செல்லும் மாணவ, மாணவிகள் சைக்கிள்கள் மட்டுமின்றி பள்ளி வேன்கள் மற்றும் பைக் உள்ளிட்ட வாகனங்கள் அடிக்கடி பஞ்சராகி விடுகிறது. சாலையில் நடந்து செல்லக்கூட முடியாத நிலையில் உள்ளது.ஆயிபுரத்தில் உள்ள உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் மணல்மேடு, ஆதிவராகநல்லூர் பகுதியை சேர்ந்த பள்ளி மாணவர்கள் இச்சாலை வழியை தவிர்த்து வயல் வெளி வழியாக செல்கின்றனர்.மழைக்காலம் துவங்குவதற்கு முன்பு தார்சாலை அமைக்கும் பணியை துரிதமாக துவங்க சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


