/உள்ளூர் செய்திகள்/மதுரை/மலை ஏறும் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இடையபட்டி பாதுகாப்புப்படையினர்மலை ஏறும் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இடையபட்டி பாதுகாப்புப்படையினர்
மலை ஏறும் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இடையபட்டி பாதுகாப்புப்படையினர்
மலை ஏறும் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இடையபட்டி பாதுகாப்புப்படையினர்
மலை ஏறும் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இடையபட்டி பாதுகாப்புப்படையினர்
மேலூர் : இந்திய திபெத் எல்லை பாதுகாப்பு படையினருக்கான மலை ஏறும் போட்டியில் மேலூர் இடையபட்டியை சேர்ந்த 45வது பட்டாலியன் வீரர்கள் தனிநபர் மற்றும் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டங்களை வென்றனர்.
14 மாநிலங்களை சேர்ந்த நன்கு பயிற்சி பெற்ற 84 வீரர்கள் போட்டிகளில் கலந்து கொண்டனர். இவர்களுக்கு கிராஸ் சீலிங், கேட் கிரவுள், ஜூமர் கிளைமிங், ஸ்டெக்சர் கிளைமிங், சீட் ரெப்லிங் என பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டது. சிறந்த மலை ஏறும் வீரர் பட்டத்தை இடையபட்டி 45வது பட்டாலியன் வீரர் அனில்குமார் பெற்றார். ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை 45வது பட்டாலியன் வீரர்கள் பெற்றனர். பரிசளிப்பு விழா இடையபட்டி முகாமில் நடந்தது. டில்லி டி.ஐ.ஜி., ஆசிஷ் சக்கரவர்த்தி தலைமை வகித்து பரிசுகளை வழங்கினார். 45வது பட்டாலியன் கமாண்டர் கோபிநாத் ஜோய், மருத்துவ அதிகாரி வர்மா, துணை கமாண்டன்ட் இன்னோபி, துணை கமாண்டன்ட்கள் கே.ராமராஜ், டாக்டர் சுனில், சந்தன் மிஸ்ரா கலந்து கொண்டனர்.