ADDED : ஜூலை 25, 2011 12:04 AM
புதுச்சேரி : பா.ஜ., கிஸான் மோர்ச்சாவின்(விவசாய அணி) மாநில செயற்குழு கூட்டம் புதுச்சேரியில் நடந்தது.
பிலிஸ் இன் ஓட்டலில் நடந்த இந்தக் கூட்டத்தில், சிறப்பு அழைப் பாளர்களாக கிஸான் மோர்ச்சா அகில பாரத தலைவர் ஓம்பிரகாஷ் தன்கர், பொதுச்செயலாளர் சுகுனாகர் ராவ், புதுச்சேரி மாநில பொறுப்பாளர் மாஸ்டர் மதன் ஆகி யோர் கலந்து கொண்டு பேசினார்.
மாநில பா.ஜ., தலைவர் தாமோதர், பொதுச்செயலாளர் அன்புச்செல்வம், தமிழக பொறுப்பாளர் மோகன் பாஸ்கர், புதுச்சேரி மாநில விவசாய அணி தலைவர் இளங்கோ, செயலாளர் பத்பநாபன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். விவசாய பிரச்னைகளுக்குத் தீர்வு காண வலியுறுத்தி வரும் ஆகஸ்ட் மாதம் 3ம் தேதி டில்லியிலுள்ள பார்லிமென்ட் முன்பாக பா.ஜ., விவசாய அணி சார்பில் நடக்கும் போராட்டத்தில் புதுச்சேரி சார்பில் பெருந்திரளாக கலந்து கொள்வது என முடிவு செய்யப்பட்டது.