ADDED : ஜூலை 25, 2011 12:04 AM
திருபுவனை : கலிதீர்த்தாள்குப்பம் முத்து மாரியம்மன் கோவில் திருவிழா நடந்தது.
விழாவை முன்னிட்டு காலை 7.30 மணிக்கு அம்மனுக்கு அபிஷேக ஆராதனையும், பிற்பகல் பக்தர்கள் அம்மனுக்கு பொங்கல் வைத்து படையலிட்டனர். மாலையில் பக்தர்கள் செடல் போட்டு, அம்மனுக்கு நேர்த்தி கடன் செலுத்தினர். இரவு அம்மன் வீதியுலா நடந்தது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி மற்றும் கிராம மக்கள் செய்திருந்தார்.