ஆனைமலை : பொள்ளாச்சி அடுத்த பில்சின்னாம்பாளையம் வாகீஸ்வரி வித்யா மந்திர் பள்ளியும் அக்ஷன்ஸ் மாணவர் அமைப்பும் இணைந்து கருத்தரங்கை நடத்தியது.
பள்ளி தாளாளர் கார்த்திகேயன் தலைமை வகித்தார்.
பள்ளியின் முன்னாள் மாணவர் நிரேஸ்குமார் அக்ஷன்ஸ் மாணவர் அமைப்பை துவங்கி மற்ற மாணவர்களையும் அமைப்பில் இணைத்துக்கொண்டார். தலைமை ஆசிரியை சண்முகப்பிரியா, தமிழாசிரியர் அம்சகோபால், உட்பட பலர் பங்கேற்றனர்.வணிகவியல் கல்வியில் சாதகமான வாய்ப்புகள் பற்றி கற்பகம் பல்கலையின் பேராசிரியர் வேல்முருகனும், பெற்றோர் குழந்தைகளுக்கான உறவுகள் பற்றி பேராசிரியை சத்யபாமாவும், வேளாண்மை துறையை வருமானம் உள்ள துறையாக மாற்றுவது பற்றி அறிவொளி முத்துச்சாமியும் பேசினர்.