Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/பருவமழை தீவிரம் அணைகள் நிரம்புகிறது

பருவமழை தீவிரம் அணைகள் நிரம்புகிறது

பருவமழை தீவிரம் அணைகள் நிரம்புகிறது

பருவமழை தீவிரம் அணைகள் நிரம்புகிறது

ADDED : ஜூலை 25, 2011 09:48 PM


Google News

பொள்ளாச்சி : மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பருவ மழை தீவிரமடைந்துள்ளதால், பி.ஏ.பி., திட்ட அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.

பரம்பிக்குளம், ஆழியாறு அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது. பொள்ளாச்சி சமவெளிப்பகுதியிலும், வால்பாறை உள்ளிட்ட மேற்கு தொடர் மலைப்பகுதிகளிலும் மூன்று வாரங்களாக பருவ மழை தீவிரமடைந்துள்ளது. தொடர் மழையால், ஆறுகளிலும், ஓடைகளில் நீர்ப்பெருக்கெடுத்து அணைகளுக்கு செல்கிறது. இதனால் பி.ஏ.பி., பாசன திட்ட அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளதால், நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. பரம்பிக்குளம் அணையின் 72 அடி உயரத்தில் 69.30 அடி நீர்மட்டம் உள்ளது. அணைக்கு விநாடிக்கு 1,387 கனஅடி நீர் வரத்துள்ளது. நீர் வரத்து அதிகரித்துள்ளதால், அணையின் நீர் மட்டம் ஒரே நாளில் ஒரு அடி உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையின் 120 அடி உயரத்தில் 103.60 அடி நீர்மட்டம் உள்ளது. அணைக்கு விநாடிக்கு 507 கனஅடி தண்ணீர் வரத்துள்ளது. அணையிலிருந்து 141 கனஅடி தண்ணீர் வெளியேறுகிறது. திருமூர்த்தி அணையில் 60 அடி உயரத்தில் 34 அடி நீர்மட்டம் உள்ளது. அமராவதி அணையின் 90 அடி உயரத்தில் 45.22 அடி நீர்மட்டம் உள்ளது. அணைக்கு விநாடிக்கு 992 கன அடி நீர் வரத்தாகவும், 260 கன அடி தண்ணீர் வெளியேற்றமாகவும் உள்ளது. தொடர்மழையால் சோலையாறு, பரம்பிக்குளம், ஆழியாறு அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. நேற்று காலை 8.00 மணி வரை பதிவான மழையளவு (மில்லி மீட்டரில்) : சோலையாறு- 21, பரம்பிக்குளம்- 20, ஆழியாறு - 1.20, மேல்நீராறு- 45, கீழ்நீராறு- 45, வால்பாறை - 12, பொள்ளாச்சி - 20, மணக்கடவு - 10, நல்லாறு - 3, தூணக்கடவு- 8, பெருவாரிப்பள்ளம்- 5, சர்க்கார்பதி - 4, காடம்பாறை - 6, வேட்டைக்காரன்புதூர் - 13, நவமலை - 6.50.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us