/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/கீழக்கரை பஸ் ஸ்டாண்ட் பணி தாமதத்தால் பரிதவிக்கும் பயணிகள்கீழக்கரை பஸ் ஸ்டாண்ட் பணி தாமதத்தால் பரிதவிக்கும் பயணிகள்
கீழக்கரை பஸ் ஸ்டாண்ட் பணி தாமதத்தால் பரிதவிக்கும் பயணிகள்
கீழக்கரை பஸ் ஸ்டாண்ட் பணி தாமதத்தால் பரிதவிக்கும் பயணிகள்
கீழக்கரை பஸ் ஸ்டாண்ட் பணி தாமதத்தால் பரிதவிக்கும் பயணிகள்
ADDED : ஜூலை 25, 2011 09:56 PM
கீழக்கரை : கீழக்கரை பஸ் ஸ்டாண்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி நிறைவு பெறாததால் மக்கள் பெரும் அவதியடைகின்றனர்.
இயற்கை இடர்பாடுகள், வட கிழக்கு பருவமழை 2010 திட்டத்தின் கீழ் கீழக்கரை நகராட்சி பஸ் ஸ்டாண்டில் கான்கிரீட் தளம் அமைக்க அரசு, ஒரு கோடியே 5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தது. பணி கடந்த மார்ச்சில் துவங்கியது. ஐந்து மாதங்களாகியும் பணி முடியவில்லை. பஸ் ஸ்டாண்டையொட்டி பள்ளம் தோண்டியதால் மக்கள் குடியிருக்கும் பகுதிகளுக்கு குடிநீர் லாரிகள் செல்ல முடியவில்லை.
ஏர்வாடி முக்கு ரோட்டில் திறந்தவெளியில் பஸ்களுக்காக வெயிலில் காத்து நிற்கின்றனர். இரவு நேரத்தில் வெளியூர் சென்று திரும்பும் மக்களிடம் ஆட்டோ டிரைவர்கள் இஷ்டத்திற்கு கட்டணம் வசூலிக்கின்றனர். சமூக நல நுகர்வோர் சேவை இயக்க செயலாளர் தங்கம் ராதா கிருஷ்ணன் கூறியதாவது: வேலைநடக்கும் இடத்தில் திட்டப்பணி குறித்த தகவல் பலகை இருக்க வேண்டும் என்பது அரசு விதி. இங்கு நடைபெறும் பணிகள் குறித்து எவ்வித தகவலும் கிடையாது. அதிகாரிகளின் அலட்சியத்தால் பணியில் தொய்வு ஏற்பட்டு மக்கள் அவதி தொடர்கிறது, என்றார். நகராட்சி செயல் அலுவலர் போஸ் கூறுகையில், ''இறுதிக்கட்ட பணி நடந்து வருகிறது ஒரு வராத்திற்குள் பஸ் ஸ்டாண்ட் பயன்பாட்டுக்கு வந்து விடும்,'' என்றார்.