ADDED : ஜூலை 25, 2011 11:01 PM
சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பை அடுத்த குமாரக்குடி பேங்க் ஆப் இந்தியா கிளையில் கடன் வழங்கும் விழா நடந்தது.சென்னை தேசிய வங்கி மேலாளர் கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.
திருவாரூர் மாவட்ட முதுநிலை மேலாளர் பழனியாண்டவர் முன்னிலை வகித்தார். கிளை மேலா ளர் சுந்தரம் வரவேற்றார். சிதம்பரகுமார், பாரதிபாஸ்கர் உள்பட வங்கி மேலாளர்கள் கடன் வழங்குவது குறித்து விளக்கி பேசினர்.இதில் குமாரக்குடி, வட்டத்தூர், நந்தீஸ்வர மங்கலம், சேத்தியாத் தோப்பு,சோழத்தரம் உள்பட பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள், மகளிர் சுய உதவிக்குழு வினருக்கு ரூ.3 கோடி செலவில் கடன் உதவி வழங்கப்பட்டது.


