ADDED : ஜூலை 25, 2011 11:06 PM
சிறுபாக்கம் : வேப்பூர் அருகே ஏற்பட்ட தீ விபத்தில் ஐந்து வீடுகள் எரிந்து சேதமானது.வேப்பூர் அடுத்த காட்டுமயிலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கலியமூர்த்தி.
இவரது வீடு கடந்த 23ம் தேதி திடீரென தீப்பிடித்து எரிந்தது. அப்போது காற்று பலமாக வீசவே அருகில் இருந்த ஜெயராமன், கண்ணன், சாமிதுரை உட்பட 5 பேரின் வீடுகளுக்கும் தீ பரவியது.தகவலறிந்த வேப்பூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். இருப்பினும் இவ்விபத்தில் வீட்டில் இருந்த உணவு தானியங்கள், பீரோ, கட்டில், 'டிவி' உட்பட 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமானது.


