வெள்ளத் தடுப்பு அணை: அமைச்சர் ஆய்வு
வெள்ளத் தடுப்பு அணை: அமைச்சர் ஆய்வு
வெள்ளத் தடுப்பு அணை: அமைச்சர் ஆய்வு
ADDED : ஜூலை 25, 2011 11:06 PM
சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பை அடுத்த சக்திவிளாகத்தில் வெள்ளத்தடுப்பு அணையை அமைச்சர் செல்வி ராமஜெயம் ஆய்வு செய்தார்.சேத்தியாத்தோப்பை அடுத்த சக்திவிளாகத்தில் வெள்ளத்தடுப்பு அணை அமைக்கப்பட்டது.
சக்திவிளாகம் கிராமத்தை வெள்ள அபாயத்தில் இருந்து பாதுகாக்க 1.5 கி.மீ., தூரம் நீட்டிக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். அதையடுத்து அணையை 1.5 கி.மீ., தூரம் நீட்டிக்க பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் அமைச்சர் செல்விராமஜெயம் வலியுறுத்தினார். இதனையடுத்து சக்திவிளாகத்தில் வெள்ளத்தடுப்பு அணை நீட்டிப்பு பணி துவக்கப்பட்டுள்ளது.இப்பணியை அமைச்சர் செல்விராமஜெயம் நேற்று மதியம் 2.30 மணிக்கு பார்வையிட்டு ஆய்வு செய்தார். அணையின் நீள அகலம், திட்ட மதிப்பீடு, தரம் குறித்து பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் உமா விளக்கினார்.ஆய்வின் போது மாவட்ட மாணவரணி இணைச் செயலர் செந்தில்குமார், இளைஞரணி இணைச் செயலர் பாஸ்கரன், மாவட்ட விவசாய அணி இணைச் செயலர் அப்பாதுரை, ஒன்றிய செயலர் ஜெயபாலன், விவசாய பிரிவு ஓன்றிய செயலர் லட்சுமணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.முன்னதாக அமைச்சர் செல்வி ராமஜெயத்திற்கு ஊராட்சி கழக செயலர் லட்சுமணன் தலைமையில் கிராம மக்கள் வரவேற்பளித்தனர்.


