ADDED : ஜூலை 25, 2011 11:13 PM
சிறுபாக்கம் : தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க ஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகிகள் கூட்டம் சிறுபாக்கத்தில் நடந்தது.ஆலை மட்டத் தலைவர் சுப்ரமணியன் தலைமை தாங்கினார்.
மாநிலக் குழு உறுப்பினர் வக்கீல் ராஜா, செயலர் சுப்ரமணியன் முன்னிலை வகித்தனர். கவுரவத் தலைவர் கந்தசாமி, பொருளாளர் பொன்னுசாமி, நாராயணன், கோகுலகிருஷ்ணன், செல்வராசு, வேதமணி உட்பட பலர் பங்கேற்றனர்.கூட்டத்தில், கரும்பு பயிரினை ஒரு வருடத்தில் வெட்டுவதை உறுதி செய்ய வேண்டும். பதிவு செய்யப்படாமல் உள்ள கரும்புகளை முன்னுரிமை கொடுத்து கரும்பு வெட்டப்படுவதை கண்டிப்பது. கரும்பு வெட்டிய விவசாயிகளுக்கு 15 நாட்களுக்குள் பணம் வழங்க வேண்டும்.வெட்டுக் கூலி, வாகன வாடகை ஆகியவற்றை ஆலை நிர்வாகம் ஏற்க வேண்டும் என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


