ADDED : ஜூலை 26, 2011 12:08 AM
புதுச்சேரி : முதல்வர் ரங்கசாமி நேற்று மதியம் ராஜ்நிவாஸ் சென்றார்.
அங்கு கவர்னர் இக்பால்சிங்கை சந்தித்து பேசினார். திட்டக் குழு கூட்டத்தில் பங்கேற்பது குறித்தும், நிதி ஒதுக்கீடு கேட்பது தொடர்பாகவும் கவர்னருடன் ஆலோசனை நடத்தினார். நியமன எம்.எல்.ஏ.,க் கள் நியமனம், அமைச்சர் நியமனம் தொடர்பாக முதல்வர் கவர்னருடன் பேசியதாக வெளியான தகவலால் பரபரப்பு ஏற்பட்டது.