Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ஜெயபிரகாஷ் நாராயணன் நூற்பாலை தொழிலாளர்கள் வேலைக்குத் திரும்பினர்

ஜெயபிரகாஷ் நாராயணன் நூற்பாலை தொழிலாளர்கள் வேலைக்குத் திரும்பினர்

ஜெயபிரகாஷ் நாராயணன் நூற்பாலை தொழிலாளர்கள் வேலைக்குத் திரும்பினர்

ஜெயபிரகாஷ் நாராயணன் நூற்பாலை தொழிலாளர்கள் வேலைக்குத் திரும்பினர்

ADDED : ஜூலை 26, 2011 12:16 AM


Google News

காரைக்கால் : காரைக்காலில் சம்பள பிரச்சனையால் இயங்காமல் கிடந்த ஜெயபிரகாஷ் நாராயணன் கூட்டுறவு நூற்பாலையில் ஊழியர்கள் நேற்று முதல் பணிக்குத் திரும்பினர்.காரைக்கால் மேலஓடுதுறை கிராமத்தில் ஜெயபிரகாஷ் நாராயணன் கூட்டுறவு நூற்பாலை உள்ளது.

இங்கு பஞ்சில் இருந்து நூல் தயாரிக்கப்படுகிறது. 350க்கும் அதிகமான தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். நிர்வாக கோளாறு காரணமாக கடந்த டிசம்பர் மாதம் முதல் ஆலைக்குத் தேவையான மூலப்பொருளான பஞ்சு இல்லாமல் தொழிற்சாலை இயங்காமல் கிடந்தது.இதனால் தொழிலாளர்களுக்குச் சம்பளம் கொடுக்க முடியாத நிலைக்கு ஆலை நிர்வாகம் தள்ளப்பட்டது.



தொழிலாளர்கள் உண்ணாவிரதம், சட்டசபை முற்றுகை, ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இதையடுத்து கடந்த ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாத சம்பளங்கள் வழங்கப்பட்டுள்ளது. இன்னும் 2 மாத சம்பளம் வழங்கப்படவில்லை. ஆலையில் பஞ்சு இல்லாததால் தொழிலாளர்கள் வேலைக்கு வருவதை நிறுத்திக் கொண்டு வேறு வேலை தேட துவங்கினர். தொழிற் சாலைக்குச் செல்லுங்கள், ஆலையை இயக்குங்கள் ஒரு வாரத்தில் பஞ்சு கிடைக்கும் என உயரதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தால் நேற்று முதல் தொழிலாளர்கள் ஆலைக்குத் திரும்பினர். ஆலையை சுத்தம்செய்யும் பணியை நேற்று துவக்கினர்.பஞ்சு வரும் நம்பிக்கையில் தொழிலாளர்கள் காத்திருக்கின்றனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us