/உள்ளூர் செய்திகள்/திருச்சி/திறப்புவிழாவுக்கு கலெக்டர் சென்றதால் மாற்றம் மனு பெறுவதில் அதிகாரிகள் "அசால்ட்'திறப்புவிழாவுக்கு கலெக்டர் சென்றதால் மாற்றம் மனு பெறுவதில் அதிகாரிகள் "அசால்ட்'
திறப்புவிழாவுக்கு கலெக்டர் சென்றதால் மாற்றம் மனு பெறுவதில் அதிகாரிகள் "அசால்ட்'
திறப்புவிழாவுக்கு கலெக்டர் சென்றதால் மாற்றம் மனு பெறுவதில் அதிகாரிகள் "அசால்ட்'
திறப்புவிழாவுக்கு கலெக்டர் சென்றதால் மாற்றம் மனு பெறுவதில் அதிகாரிகள் "அசால்ட்'
ADDED : ஜூலை 26, 2011 12:24 AM
திருச்சி: திருச்சி கலெக்டர் ஜெயஸ்ரீமுரளிரதன் தோட்டக்கலைக் கல்லூரி திறப்புவிழாவுக்காக நேற்று சென்றதால், மனுக்கள் பெறுவதில் அதிகாரிகள் அலட்சியம் காட்டினர்.
மேலும், கீழ்வரிசையில் இருக்க வேண்டிய அதிகாரிகள், வழக்கம்போல் மேடையேறினர். திருச்சி கலெக்டராக ஜெயஸ்ரீமுரளிதரன் வந்த பிறகு பல அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார். மேலும் மக்களிடம் நல்ல இணக்கமான சூழலை ஏற்படுத்தியுள்ளார். குறிப்பாக தான் ஒரு கலெக்டர் என்ற அதிகார தோரணையுடன் யாரிடமும் அணுகாமல், யாரிடம் பேசுகிறாரோ அவர்களில் ஒருவராக பழகி, பிரச்னைகளை கேட்டறிகிறார். இப்படியொரு கலெக்டர் வரமாட்டாரா என்று எங்கிய திருச்சி மாவட்ட மக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம் ஜெயஸ்ரீ என்றே சொல்லலாம். அந்தளவுக்கு எளிமை, கனிவு, பணிவு காட்டுகிறார். குறிப்பாக பொதுமக்களிடம் பேசும்போது, நிதானமாகவும், அவர்களை அனுசரித்தும் பேசுகிறார். இதற்கு முன் அதிரடி நடவடிக்கை எடுக்கும் கலெக்டர்கள் பலர் இருந்தாலும், பொதுமக்கள் எளிதில் அணுகுவதிலும், பழகுவதில் மென்மையானவர் ஜெயஸ்ரீ. இவர் திருச்சி கலெக்டராக வந்த பிறகு, மக்கள குறைதீர் கூட்டத்துக்கு வரும் மக்களுக்காக பல வசதிகளை ஏற்படுத்தி வருகிறார். நடமாடும் கழிவறை கொண்டு வந்தது; மகளிர் சுய உதவிக்குழுவினரை கடைபோடும் படி உத்தரவிட்டது; குறிப்பாக மனு வாங்கும் இடங்களை பிரித்தது என பல மாற்றங்களை செய்திருந்தார். முன்பெல்லாம் மனு அளிக்க வருபவர்கள் மேடையேறி தான் கலெக்டரிடம் மனு அளிக்க வேண்டும். இதனால், மனு அளிக்க வரும் முதியோர், மாற்றுத்திறனாளிகள் மேடைய÷றும்போது சிரமப்பட்டனர். இதை கவனித்த கலெக்டர் ஜெயஸ்ரீமுரளிதரன், மேடையை விட்டு மக்களுக்காக கீழே இறங்கி வந்தார். தரையில் சேர் போட்டு அமர்ந்து மனுக்களை பெற்று வந்தார். நேற்று நடந்த மகளிர் தோட்டக்கலைக் கல்லூரி திறப்புவிழா ஏற்பாடுகளை கவனிக்க சென்றார். இதனால், டி.ஆர்.ஓ., பேச்சியம்மாள் தலைமையில் மனுக்கள் பெறப்பட்டன. கலெக்டர் இல்லாததால், அனைத்து அதிகாரிகளும் மேடையேறினர். இதனால், முதியோர், மாற்றுத்திறனாளிகள் மேடைய÷றி மனுக்கொடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இதனால், அவர்கள் சிரமப்பட்டனர். அதிகாரிகள் புதிதாக எதுவும் செய்ய வேண்டாம். தற்போதுள்ள நடைமுறைகளை பின்பற்றினாலே போதும். மனு அளிக்க வருபவர்கள் ஒருவித ஏக்க உணர்வுடன் தான் வருகின்றனர். அவர்களின் பிரச்னைகளை தீர்க்காவிட்டாலும், அவர்களுடைய ஏக்கங்களை மேலும் தூண்டும் வகையில் நடந்து கொள்ளாமல் இருக்க வேண்டும். கலெக்டர் இல்லாத ஒரேநாளில் ஏற்பட்ட மாற்றம் மனு கொடுக்க வந்தவர்களை முகம்சுளிக்க வைத்தது.


