மண்ணச்சநல்லூரில் கழுவேற்ற திருவிழா
மண்ணச்சநல்லூரில் கழுவேற்ற திருவிழா
மண்ணச்சநல்லூரில் கழுவேற்ற திருவிழா
ADDED : ஜூலை 26, 2011 12:28 AM
மண்ணச்சநல்லூர்: மண்ணச்சநல்லூர் அடுத்துள்ள பூனாம்பாளையத்தில் காத்தவராயன் ஸ்வாமி பூஜை மற்றும் கழுவேற்ற திருவிழா நடந்தது.
மண்ணச்சநல்லூர் தாலுகா பூனாம்பாளையத்தில் உள்ள அன்னகாமாட்சியம்மன், சேப்பிள்ளையான் ஸ்வாமி, காத்தவராயன் ஸ்வாமி திருவிழா ஜூலை 22ம் தேதி துவங்கி மூன்று நாட்கள் நடந்தது. அன்று கொள்ளிடம் ஆற்றுக்கு விருதுகளுடன் சென்று கரகம் பாலித்தது ஊர்வலமாக கோவிலுக்கு சென்றடைந்தனர். அன்று இரவு காத்தவராயன் கதை பாடலும் கழுவேற்றம் நடந்தது. ஜூலை 24 அன்று காட்டுக்கோயிலில் கிடா வெட்டு பூஜையும், ஜூலை 25ல் ஊர் மெரவனையும், மா விளக்கு பூஜையும் நடந்தது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி பெரியண்ணன் தலைமையில் பக்தர்கள் செய்தனர். பூனாம்பாளையம், எட்டரைபாளையம் கிராம மக்கள் திரளாக திருவிழாவில் பங்கேற்றனர்.