மாற்றுத்திறனாளிகளுக்கு தனித்தனியே மருத்துவச் சான்றிதழ்
மாற்றுத்திறனாளிகளுக்கு தனித்தனியே மருத்துவச் சான்றிதழ்
மாற்றுத்திறனாளிகளுக்கு தனித்தனியே மருத்துவச் சான்றிதழ்
ADDED : ஜூலை 26, 2011 12:34 AM
சென்னை : சென்னை, கே.கே.நகரில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில வள மற்றும் பயிற்சி மையத்தில், செவ்வாய்தோறும், மாற்றுதிறனாளிகளுக்கு, ஊனத்தின் தன்மைக்கான மருத்துவச் சான்றிதழ் வழங்கப்படுகிறது.
இம்மையத்திற்கு வரும் மாற்றுதிறனாளிகளின் எண்ணிக்கையை கருத்தில்கொண்டு, அவர்களுக்கு அடுத்த மாதம் 2ம் தேதி முதல், தனித்தனியாக மருத்துவச் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.
திங்கள் - செவித்திறன் மற்றும் கண் பார்வை குறையுடையோர், செவ்வாய் - கை, கால் இயக்க குறைபாடு உடையோர், மூளை முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்டோர் மற்றும் தொழுநோய் குணமடைந்தோர், வெள்ளி - மனவளர்ச்சிக் குன்றியோர், பலவகை ஊனத்தால் பாதிக்கப்பட்டோர், மனநலம் பாதிக்கப்பட்டோர் மற்றும் வெளியுலக சிந்தனையற்றோர் ஆகியோருக்கு, அவர்களுக்கான மருத்துவச் சான்றிதழ் வழங்கப்படும்.
தமிழக அரசின் செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.