Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ஓட்டல் அபகரிப்பு புகார்: தி.மு.க., மாஜியை கைது செய்ய கூடாது : ஐகோர்ட் கிளை உத்தரவு

ஓட்டல் அபகரிப்பு புகார்: தி.மு.க., மாஜியை கைது செய்ய கூடாது : ஐகோர்ட் கிளை உத்தரவு

ஓட்டல் அபகரிப்பு புகார்: தி.மு.க., மாஜியை கைது செய்ய கூடாது : ஐகோர்ட் கிளை உத்தரவு

ஓட்டல் அபகரிப்பு புகார்: தி.மு.க., மாஜியை கைது செய்ய கூடாது : ஐகோர்ட் கிளை உத்தரவு

ADDED : ஜூலை 26, 2011 12:52 AM


Google News

மதுரை : திருச்சியில் ஓட்டல் காஞ்சனாவை அபகரிக்க முயன்ற வழக்கில் தி.மு.க., முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு உட்பட ஐந்து பேரை நாளை வரை கைது செய்யக் கூடாது, என மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

நாமக்கல்லை சேர்ந்த டாக்டர் கதிர்வேல்.

இவர் திருச்சி கமிஷனரிடம் அளித்த புகாரில், ''ஓட்டல் காஞ்சனா நிர்வாகத்திலிருந்து என்னை வெளியேற்ற, சிலர் தூண்டுதல் பேரில் குருசங்கரநாராயணன் உட்பட சிலர் முயற்சித்தனர். ஏற்கனவே புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்,'' என கோரினார்.



இப்புகார் குறித்து போலீசார் கைது செய்யாமலிருக்க முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, திருச்சி மாநகராட்சி துணை மேயர் அன்பழகன், குருசங்கர நாராயணன், குமார், ரங்கநாதன் முன்ஜாமின் கோரி மதுரை ஐகோர்ட்டில் மனு செய்தனர். மனு நீதிபதி ஆர்.மாலா முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் மூத்த வக்கீல் அசோக்குமார், வக்கீல்கள் மொகைதீன் பாஷா, செந்தில்குமார் ஆஜராயினர். அரசு கூடுதல் வக்கீல் ராமர், ''வழக்கில் அரசு தலைமை குற்றவியல் வக்கீல் ஐ.சுப்ரமணியம் ஆஜராக இருப்பதால், அவகாசம் வழங்க வேண்டும்,'' என்றார். இதற்கெல்லாம் தலைமை குற்றவியல் வக்கீல் வர வேண்டுமா? நீதிபதி கேள்வி எழுப்பினார். பின், நீதிபதி, ''முன்ஜாமின் மனு நாளை தள்ளிவைக்கப்படுகிறது. அதுவரை மனுதாரர்களை கைது செய்ய கூடாது,'' என அரசு தரப்புக்கு உத்தரவிட்டார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us