/உள்ளூர் செய்திகள்/மதுரை/நில அபகரிப்பு வழக்கு: மதுரை தி.மு.க.,வினர் ஜாமின் மனு "டிஸ்மிஸ்' : மாஜிஸ்திரேட் உத்தரவுநில அபகரிப்பு வழக்கு: மதுரை தி.மு.க.,வினர் ஜாமின் மனு "டிஸ்மிஸ்' : மாஜிஸ்திரேட் உத்தரவு
நில அபகரிப்பு வழக்கு: மதுரை தி.மு.க.,வினர் ஜாமின் மனு "டிஸ்மிஸ்' : மாஜிஸ்திரேட் உத்தரவு
நில அபகரிப்பு வழக்கு: மதுரை தி.மு.க.,வினர் ஜாமின் மனு "டிஸ்மிஸ்' : மாஜிஸ்திரேட் உத்தரவு
நில அபகரிப்பு வழக்கு: மதுரை தி.மு.க.,வினர் ஜாமின் மனு "டிஸ்மிஸ்' : மாஜிஸ்திரேட் உத்தரவு
மதுரை : மதுரையில் நில அபகரிப்பு வழக்கில் கைதான தி.மு.க., நகர செயலாளர் தளபதி, தலைமை செயற்குழு உறுப்பினர் பொட்டுசுரேஷ் (சுரேஷ்பாபு) உட்பட நால்வரது ஜாமின் மனுவை, முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட் முத்துக்குமார் டிஸ்மிஸ் செய்தார்.
பொட்டுசுரேஷின் வக்கீல்கள் இளங்கோ, ரவி: புகார்தாரர் ஏற்கனவே ஜூலை 13 ல் எஸ்.பி.,யிடம் ஒரு புகார் கொடுத்தார். அதில் ஒரு ஐ.ஏ.எஸ்., அதிகாரி, டி.எஸ்.பி., பெயரை குறிப்பிட்டார். மறுநாள் அப்புகாரை மறைத்து, மற்றொரு புகார் கொடுத்தார். அதில் பொட்டுசுரேஷ் பெயரை குறிப்பிட்டார். இதில் உள்நோக்கம் இருக்கிறது. இதற்கு பின்னணி உள்ளது. ஒரு புகாரில் தான் மிரட்டப்பட்டதாகவும், மற்றொரு புகாரில் கணவர் மிரட்டப்பட்டதாகவும் முரண்பாடாக தெரிவித்துள்ளார். தளபதியின் வக்கீல்கள் மோகன்குமார், குபேந்திரன்: இது முழுக்க முழுக்க சிவில் வழக்கு. அரசியல் உள்நோக்கத்துடன் தொடரப்பட்டது. தளபதி, கொடிசந்திரசேகரன் தி.மு.க.,வில் பொறுப்புகளை வகிப்பவர்கள்.
கிருஷ்ணபாண்டியனின் வக்கீல்கள் லிங்கத்துரை, அன்புசெல்வன்: பொய் புகாரில் வழக்கு தொடரப்பட்டுள்ளது, ஆவணங்களை பார்க்கும் போது தெரியலாம். இதுகுறித்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் புகார் கொடுக்காமல், தற்போது புகார் கொடுத்ததில் உள்நோக்கம் இருக்கிறது. அரசு வக்கீல்கள் முகமது சிக்கந்தர் துல்கர்னி, பாண்டியராஜன்: இவ்வழக்கில் 12 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 4 பேர் மட்டும் கைதாகியுள்ளனர். மற்ற நால்வரின் முன்ஜாமின் மனு ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளது. மனுதாரர்களின் போலீஸ் காவலை மறுத்த இந்த கோர்ட் உத்தரவை எதிர்த்து ஐகோர்ட் கிளையில் சீராய்வு மனு செய்யப்பட்டுள்ளது.
ஆவணங்களை பார்க்கையில் குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரங்கள் உள்ளன. மனுதாரர்கள் அரசியல் கட்சியினர். அவர்களை வெளியில் விட்டால், என்ன நடக்கும் என இந்த கோர்ட்டுக்கு தெரியும். சாட்சிகளை கலைப்பார்கள். சிவில் வழக்காக கருதக் கூடாது. ரூ.நாலரை கோடிக்கு புகார்தாரர் ஏமாற்றப்பட்டார். ஜாமின் வழங்க கூடாது. புகார்தாரர் சிவனாண்டியின் வக்கீல் இளமன்: மனுதாரர்களுக்கு ஜாமின் வழங்க கூடாது. (இவரை பேச அனுமதிக்க கூடாது என தி.மு.க., வக்கீல்கள் திலக்குமார், அன்புநிதி, செந்தில், செல்வகணேசன் எதிர்ப்பு தெரிவித்ததால், கோர்ட்டில் சத்தம் ஏற்பட்டது. அவர்களை மாஜிஸ்திரேட் அமைதிப்படுத்தினார்). முடிவில் ஜாமின் மனுக்களை தள்ளுபடி செய்து, மாஜிஸ்திரேட் பிறப்பித்த உத்தரவில், ''வழக்கு விசாரணை துவக்க நிலையில் உள்ளது. மனுதாரர்களை போலீஸ் காவல் கோரிய சீராய்வு மனு ஐகோர்ட் கிளையில் நிலுவையில் உள்ளது,'' என்றார்.


