/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/பனிமய மாதா திருவிழாவிற்கு சிறப்பு பஸ்கள் இயக்க பயணிகள் நலச்சங்கம் கோரிக்கைபனிமய மாதா திருவிழாவிற்கு சிறப்பு பஸ்கள் இயக்க பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை
பனிமய மாதா திருவிழாவிற்கு சிறப்பு பஸ்கள் இயக்க பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை
பனிமய மாதா திருவிழாவிற்கு சிறப்பு பஸ்கள் இயக்க பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை
பனிமய மாதா திருவிழாவிற்கு சிறப்பு பஸ்கள் இயக்க பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை
ADDED : ஜூலை 26, 2011 12:58 AM
தூத்துக்குடி : தூத்துக்குடி பனிமய மாதா திருவிழாவிற்கு சிறப்பு பஸ்கள் இயக்க அரசு போக்குவரத்து கழகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.இதுகுறித்து மாவட்ட பயணிகள் நலச்சங்க மாவட்டத்தலைவர் கல்யாணசுந்தரம் கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:தூத்துக்குடி தூய பனிமயமாதா ஆலய திருவிழா ஆண்டுதோறும் ஜூலை 26ம் தேதிமுதல் ஆகஸ்ட் 5ம் தேதிவரை நடைபெறும்.
இந்த திருவிழாவில் தமிழகம் மட்டுமில்லாமல் கேரளா உள்ளிட்ட பிற மாநிலங்களிலிருந்தும் இலங்கை மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் பக்தர்கள் கலந்துகொள்கின்றனர்.இந்த திருவிழா 429ம் ஆண்டு திருவிழாவாக சிறப்பாக நடக்க உள்ளது. இந்த திருவிழாவிற்கு சென்னை, திருச்சி, கோவை, வேளாங்கன்னி, நாகர்கோவில் ஆகிய ஊர்களில் இருந்து கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்கவேண்டும். இதுபோல் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அனைத்து வெளியூர்களிலிருந்தும் மற்றும் சுற்றியுள்ள கிராம பகுதிகளிலிருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கவேண்டும். இந்த திருவிழாவை முன்னிட்டு சிறப்பு பஸ்கள் நிற்பதற்கு 26ம் தேதி முதல் ஆகஸ்ட் 5ம் தேதிவரை தற்காலிகமாக மாதா கோவில் அருகே பஸ் ஸ்டாண்ட் அமைக்க வேண்டும். இவ்வாறுஅந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.


