/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/சமச்சீர் கல்வியை நடப்பு கல்வியாண்டிலேயே அமுல்படுத்த கோரிக்கைசமச்சீர் கல்வியை நடப்பு கல்வியாண்டிலேயே அமுல்படுத்த கோரிக்கை
சமச்சீர் கல்வியை நடப்பு கல்வியாண்டிலேயே அமுல்படுத்த கோரிக்கை
சமச்சீர் கல்வியை நடப்பு கல்வியாண்டிலேயே அமுல்படுத்த கோரிக்கை
சமச்சீர் கல்வியை நடப்பு கல்வியாண்டிலேயே அமுல்படுத்த கோரிக்கை
ADDED : ஜூலை 26, 2011 01:06 AM
தூத்துக்குடி : நடப்பு கல்வியாண்டில் முழுமையான சமச்சீர் கல்வியை அமுல்படுத்த வேண்டும்என்று தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தியுள்ளது.தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தூத்துக்குடி மாவட்ட கிளையின் சிறப்பு அவசர செயற்குழு கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் மயில் தலைமை வகித்தார். மாநில பொதுக்குழு உறுப்பினர் அர்ச்சுணப்பெருமாள் வரவேற்றார். மாவட்டத் துணைத்தலைவர் புனித அந்தோணி கடந்த கூட்டறிக்கையை வாசித்தார். வேலை அறிக்கையை மாவட்டச்செயலாளர் முத்தையா வாசித்தார்.
கூட்டத்தில் முழுமையான சமச்சீர்கல்வியை நடப்பு கல்வியாண்டிலேயே அமுல்படுத்திடவேண்டும், தன்பங்கேற்பு ஓய்வூதியத்திட்டத்தினை கைவிடவேண்டும். பழைய ஓய்வூதிய முறை தொடரவேண்டும், ஆறாவது ஊதியக்குழு ஊதியமாற்றக் குறைபாடுகளை களைந்திடவேண்டும், ஒழிவு மறைவற்ற மாறுதல் கலந்தாய்வு முறையை அமுல்படுத்தவேண்டும், மொத்தப்பணிக்கால அடிப்படையில் நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வழங்கிடவேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மாவட்டத்துணைச்செயலாளர் சத்யபாமா நன்றிகூறினார்.


