/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/டிப்பர் லாரி மோதி விவசாயி படுகாயம்டிப்பர் லாரி மோதி விவசாயி படுகாயம்
டிப்பர் லாரி மோதி விவசாயி படுகாயம்
டிப்பர் லாரி மோதி விவசாயி படுகாயம்
டிப்பர் லாரி மோதி விவசாயி படுகாயம்
ADDED : ஜூலை 26, 2011 01:07 AM
படுகாயம்குரும்பூர் : குரும்பூர் அருகே டிப்பர் லாரி மோதி விவசாயி படுகாயமடைந்தார்.
இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது, குரும்பூர் அருகே உள்ள வடக்குநல்லூரைச் சேர்ந்த இருளன் மகன் சகாதேவன்(45) விவசாயி. குரும்பூர் பஜாரில் வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கிவிட்டு சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது சுயம்புலிங்கபுரம் என்ற இடத்தில் வரும் போது எதிரே வந்த டிப்பர் லாரி சகாதேவன் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயமடைந்து தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுபற்றி குரும்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் வழக்கு பதிவு செய்து நாசரேத் பிள்ளையன்மனையைச் சேர்ந்த டிரைவர் மகேஸ்வரனை கைது செய்தார்.


