Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/தூத்துக்குடி பனிமய மாதா திருவிழா பாதுகாப்பு பணிக்கு 500 போலீசார் நியமிக்க முடிவு

தூத்துக்குடி பனிமய மாதா திருவிழா பாதுகாப்பு பணிக்கு 500 போலீசார் நியமிக்க முடிவு

தூத்துக்குடி பனிமய மாதா திருவிழா பாதுகாப்பு பணிக்கு 500 போலீசார் நியமிக்க முடிவு

தூத்துக்குடி பனிமய மாதா திருவிழா பாதுகாப்பு பணிக்கு 500 போலீசார் நியமிக்க முடிவு

ADDED : ஜூலை 26, 2011 01:11 AM


Google News

தூத்துக்குடி : தூத்துக்குடி பனிமய மாதா பேராலய திருவிழாவை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் 500 போலீசார் ஈடுபடவுள்ளனர்.

குற்றங்களை தடுக்க 7 இடங்களில் சிசிடிவி பொருத்தப்பட்டுள்ளது. திருவிழாவை முன்னிட்டு பீச் ரோட்டில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.தூத்துக்குடி தென்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் ன்னராஜன் நிருபர்களிடம் கூறியதாவது; இன்று முதல் ஆகஸ்ட் 5ம் தேதி வரை நடக்கவுள்ள புனித பனிமயமாதா பேராலய திருவிழாவை முன்னிட்டு எஸ்.பி., நரேந்திரன் நாயர் தலைமையில், ஏ.எஸ்.பி., சோனல்சந்திரா நேரடி மேற்பார்வையில் 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். பேராலய திருவிழாவில் எவ்வித சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்னையோ, திருட்டோ நடைபெறாமல் தடுக்க விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 7 இடங்களில் சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட உள்ளது.



10 வீடியோ கேமராக்கள் மூலம் தேவைப்படும் இடங்களில் குற்றவாளிகள் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட உள்ளது. கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டும், உயரமான கட்டடங்களில் இருந்தும் பைனாகுலர் மூலம் கண்காணிக்கப்பட உள்ளது. எவ்வித செயின்பறிப்போ அல்லது திருட்டோ நடைபெறாமல் தடுக்க 100 ஆண் மற்றும் பெண் போலீசார் மப்டியில் பொதுமக்களோடு கலந்து கெட்ட நடத்தைகாரர்களை கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 10 இருசக்கர வாகன ரோந்து அதிரடிப்படையினர் மூலம் பொதுமக்கள் செல்லும் அனைத்து பாதையிலும் பாதுகாப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஊர்காவல்படை, என்.சி.சி., மாணவர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபடவுள்ளனர்.



மருத்துவகுழு, தீயணைப்புதுறை, மாநகராட்சி, மின்வாரியம் ஆகியவற்றின் மூலம் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு திருடர்களை அடையாளம் காண்பிக்கும் விதமாக திருடர்களின் போட்டோக்கள் அடங்கிய டிஜிட்டல் போர்டுகள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து இடையூரை தடுக்க பீச்ரோட்டில் இருந்து வரக்கூடிய வாகனங்கள் பெல் ஹோட்டல், பிபிஎம்டி சந்திப்பு, தீயணைப்பு நிலையம், பழைய முனிசிபல் ஆபிஸ் சந்திப்பு, ரயில்வே ஸ்டேஷன் ரோடு வழியாக செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பெல் ஹோட்டலில் இருந்து ஸ்டேட் பாங்க் வரை உள்ள ரோடு முற்றிலுமாக போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.



மேலும் பொதுமக்கள் வாகனங்களை நிறுத்துவதற்காக ஜார்ஜ் ரோட்டில் உள்ள லசால் பள்ளி மைதானத்திலும், விஇ., ரோட்டில் கேரகோப் மைதானத்திலும், டபிள்யூஜிசி ரோட்டில் புனித சேவியர் பள்ளி மைதானத்திலும், பீச் ரோட்டில் கால்டுவெல் பள்ளி அருகிலும், ரோச் பார்க் முன்பாகவும், காரபேட்டை பள்ளி மற்றும் தருவை மைதானம் முன்பாகவும் வாகனங்களை நிறுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்றார். அப்போது வடபாக இன்ஸ்பெக்டர் வீமராஜ், சென்ட்ரல் இன்ஸ்பெக்டர் ஜோசப்ஜெட்சன், டிராபிக் இன்ஸ்பெக்டர் சுப்பையா ஆகியோர் உடன் இருந்தனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us