Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/புனித மிக்கேல் ஆலயத்தில் மறை கல்வி ஆண்டு விழா

புனித மிக்கேல் ஆலயத்தில் மறை கல்வி ஆண்டு விழா

புனித மிக்கேல் ஆலயத்தில் மறை கல்வி ஆண்டு விழா

புனித மிக்கேல் ஆலயத்தில் மறை கல்வி ஆண்டு விழா

ADDED : ஜூலை 26, 2011 01:25 AM


Google News

தென்காசி : தென்காசி புனித மிக்கேல் அதிதூதர் ஆலயத்தில் மறை கல்வி ஆண்டு துவக்க விழா நடந்தது.தமிழகம் முழுவதும் கத்தோலிக்க திருச்சபை, தமிழக ஆயர் பேரவை சார்பில் இந்த ஆண்டு மறை கல்வி ஆண்டாக கொண்டாடப்பட்டு வருகிறது.

கிறிஸ்தவ மாணவ, மாணவிகளுக்கு உண்மைகளையும், பைபிள் அறிவுரைகளையும் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் மறை மாவட்ட பங்கு அளவில் மறை கல்வி நடத்தப்பட்டு வருகிறது.இந்த மறை கல்வி ஆண்டு துவக்க விழா தென்காசி புனித மிக்கேல் அதிதூதர் ஆலயத்தில் நடந்தது. கொடியேற்றம், திருப்பலி வியாகப்பராஜ் தலைமையில் நடந்தது. சிறுவர், சிறுமியர் முதல் இளம் மாணவ, மாணவிகள் வரை நான்கு நிலைகளாக மறை கல்வி பயிற்சி வகுப்புகள் நடந்தது. இதில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.முன்னதாக இறை மக்களின் ஊர்வலம் நடந்தது. ஏற்பாடுகளை மறை கல்வி பணி குழுவினர் செய்திருந்தனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us