/உள்ளூர் செய்திகள்/கடலூர்/காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் : சத்துணவு பணியாளர் சங்கம் வலியுறுத்தல்காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் : சத்துணவு பணியாளர் சங்கம் வலியுறுத்தல்
காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் : சத்துணவு பணியாளர் சங்கம் வலியுறுத்தல்
காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் : சத்துணவு பணியாளர் சங்கம் வலியுறுத்தல்
காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் : சத்துணவு பணியாளர் சங்கம் வலியுறுத்தல்
ADDED : ஜூலை 26, 2011 10:37 PM
கடலூர் : பணி நிரந்தரப்படுத்தி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என சத்துணவு பணியாளர் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
சத்துணவு பணியாளர் சங்க மாநில செயற்குழுக் கூட்டம் கடலூரில் நடந்தது. மாநிலத் தலைவர் கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். பொதுச் செயலர் சீனுவாசன் வரவேற்றார். துணைத் தலைவர்கள் காளிங்கநாதன், முத்துராமலிங்கம், கலியபெருமாள், அமைப்புச் செயலர் சேகர், தலைமை நிலையச் செயலர் செல்வராஜன், பொருளாளர் பரமசிவம், மாவட்ட தலைவர் பாலகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.
அரசு பணியாளர் சங்க மாநிலத் தலைவர் பாலசுப்ரமணியன் சத்துணவு பணியாளர்களின் கோரிக்கை மற்றும் அரசின் நிலைபாட்டை விளக்கிப் பேசினார்.
கூட்டத்தில், சத்துணவு பணியாளர்களை முழுநேர பணியாளர்களாக நிரந்தரப்படுத்தி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். பணியாளர்களின் கல்வித் தகுதி அடிப்படையில் பிறதுறை காலிப் பணியிடங்களில் நிரப்ப வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் அக்டோபர் மாதம் மாநில மாநாடு நடத்தவும், மாநாட்டிற்கு அமைச்சர்கள் செல்வி ராமஜெயம், சம்பத் ஆகியோரை அழைப்பது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட செயலர் திவ்யநாதன் நன்றி கூறினார்.