ஸ்ரீமுஷ்ணம் : ஸ்ரீமுஷ்ணம் பி.பி.ஜெ., கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கல்லூரிகளுக்கிடையேயான கபடி போட்டி நேற்று நடந்தது.
கல்லூரி நிர்வாகி பிரகாஷ் தலைமை தாங்கினார். விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கலைக் கல்லூரி உடற்கல்வி இயக்குனர் கவாஸ்கர் முன்னிலை வகித்தார். நிறுவனர் பத்மநாபன் போட்டிகளை துவக்கி வைத்தார். இதில் கடலூர், விழுப்புரம் மாவட்டங்களைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட கல்லூரி அணியினர் பங்கேற்றனர். கல்லூரிமுதல்வர் தெய்வநாயகம், உடற்கல்வி இயக்குநர் ரமேஷ், உதவிப் பேராசிரியர்கள் பங்கேற்றனர்.