/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/பொது இடங்களில் "புகை': மக்கள் திணறல்பொது இடங்களில் "புகை': மக்கள் திணறல்
பொது இடங்களில் "புகை': மக்கள் திணறல்
பொது இடங்களில் "புகை': மக்கள் திணறல்
பொது இடங்களில் "புகை': மக்கள் திணறல்
ADDED : ஜூலை 27, 2011 03:21 AM
திருவள்ளூர் : பொது இடங்களில் புகை பிடிப்போர் எண்ணிக்கை, திருவள்ளூரில்
அதிகரித்து உள்ளது.
இவர்கள் மீது சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை
எடுக்க வேண்டும்.சிகரெட், பீடி புகைப்போர் வெளிவிடும் புகை, பிறரது உடல்
நலத்தை அதிகளவில் பாதிப்பதால், பொது இடங்களில் புகைக்க தடை உள்ளது.
திருவள்ளூரில் பேக்கரி, டீக்கடைகள், பஸ் நிலையம், தாலுகா அலுவலக வளாகம் என,
மக்கள் அதிகளவில் வந்து செல்லும் பொது இடங்கள், அரசு அலுவலக பகுதிகளில்
புகை பிடிக்க தடை உள்ளது.இங்கு புகை பிடிக்கக்கூடாது என, அறிவிப்பு
வாசகங்களும் வைக்கப்படுகிறது. சுகாதாரத்துறை தரப்பில் அவ்வப்போது பொது
இடங்களில் திடீர் ஆய்வு நடத்தி, புகை பிடிப்போரை பிடித்து அபராதம்
வசூலிக்கின்றனர்.இவர்களுக்கு, 200 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படுவதால் புகை
பிடிப்போர் சிலர், பொது இடங்களில் புகைப்பதை தவிர்க்கின்றனர்.மற்றபடி
பெரும்பாலானோர், பொது இடங்களில் வழக்கம்போல் சிகரெட் மற்றும் பீடியை ஊதித்
தள்ளுகின்றனர். சுகாதாரத்துறை தரப்பில் தற்போது எவ்வித நடவடிக்கையும்
இல்லாததால், திருவள்ளூரில் பொது இடங்களில் புகை பிடிப்பது
அதிகரித்துள்ளது.இதுகுறித்து, சுகாதாரத்துறை ஆய்வாளர் ஒருவர் கூறும்போது,
''உயரதிகாரிகள் உத்தரவிட்டால்தான், எங்களால் பொது இடங்களில் புகைப்போர்
மீது நடவடிக்கை எடுக்க முடியும்,'' என்றார்.வர்த்தக நிறுவனங்கள், பஸ்
நிறுத்தங்கள், மருத்துவமனை வளாகம், அரசு அலுவலக வளாகம் என, மக்கள்
நடமாட்டம் அதிகமாக உள்ள இடங்களில் தைரியமாக புகைக்கின்றனர். புகை
மூட்டத்தால் அருகில் உள்ள பலருக்கு, மூச்சுத்திணறல், கண் எரிச்சல்,
குமட்டல் ஏற்படுகிறது.சிகரெட் புகையை சுவாசிக்கும் குழந்தைகளுக்கு, சிறு
வயதிலேயே நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.எனவே,
பொது இடங்களில் புகைப்போர் மீது, மீண்டும் நகராட்சி சுகாதாரத்துறை
அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.