மற்றொரு வீடு அபகரிப்பு வழக்கு"அட்டாக்' பாண்டி ரிமாண்ட்
மற்றொரு வீடு அபகரிப்பு வழக்கு"அட்டாக்' பாண்டி ரிமாண்ட்
மற்றொரு வீடு அபகரிப்பு வழக்கு"அட்டாக்' பாண்டி ரிமாண்ட்
ADDED : ஜூலை 27, 2011 04:55 AM
மதுரை : மதுரையில் மற்றொரு வீடு அபகரிப்பு வழக்கில் 'அட்டாக்' பாண்டி கோர்ட் உத்தரவுப்படி, ரிமாண்ட் செய்யப்பட்டார்.கோவையை சேர்ந்த ஜவுளி வியாபாரி ஜெகதீசன்.
இவர், மதுரை கே.கே. நகரை சேர்ந்த பூ வியாபாரி ஷியாம் சுந்தரிடம் 2009ல் பல லட்சம் ரூபாய் கடன் வாங்கினார். அதற்காக, கே.கே. நகரில் உள்ள வீட்டை ஷியாம்சுந்தரிடம் ஈடாக கொடுத்திருந்தார். வீட்டை அபகரிக்கும் நோக்கில், தூத்துக்குடி மாவட்ட வேளாண் விற்பனை உதவி பொறியாளர் சக்திவேல் (முதுகுளத்தூர் தி.மு.க., மாஜி எம்.எல்.ஏ., முருகவேலின் தம்பி), மாஜி வேளாண் விற்பனைக்குழு தலைவர் 'அட்டாக்' பாண்டி, ஷியாம்சுந்தர் ஆகியோர் ஜெகதீசனை வரவழைத்து, 20 லட்சம் ரூபாய் கொடுத்து மிரட்டி, வீட்டை எழுதி வாங்கினர்.ஜெகதீசன் புகார்படி, ஷியாம்சுந்தர், சக்திவேல், 'அட்டாக்' பாண்டி மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இவ்வழக்கில், திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள 'அட்டாக்' பாண்டியை போலீசார் நேற்று மதுரை இரண்டாவது ஜெ.எம்., கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரை, ஆக.,9 வரை ரிமாண்ட் செய்து, மாஜிஸ்திரேட் முத்துக்குமரன் உத்தரவிட்டார்.