/உள்ளூர் செய்திகள்/மதுரை/உங்கள் பகுதியில் கொசு மருந்து அடிக்கவில்லையா :ஒழிக்க 3 மாதத்திற்கு 3,000 லிட்டர் மருந்து "ரெடி'உங்கள் பகுதியில் கொசு மருந்து அடிக்கவில்லையா :ஒழிக்க 3 மாதத்திற்கு 3,000 லிட்டர் மருந்து "ரெடி'
உங்கள் பகுதியில் கொசு மருந்து அடிக்கவில்லையா :ஒழிக்க 3 மாதத்திற்கு 3,000 லிட்டர் மருந்து "ரெடி'
உங்கள் பகுதியில் கொசு மருந்து அடிக்கவில்லையா :ஒழிக்க 3 மாதத்திற்கு 3,000 லிட்டர் மருந்து "ரெடி'
உங்கள் பகுதியில் கொசு மருந்து அடிக்கவில்லையா :ஒழிக்க 3 மாதத்திற்கு 3,000 லிட்டர் மருந்து "ரெடி'
ADDED : ஜூலை 27, 2011 05:18 AM
மதுரை : மதுரை மாநகராட்சியில் கொசுத்தொல்லையை ஒழிக்க 10 லட்சம் ரூபாய் மதிப்பில் 3,000 லிட்டர் 'மாலத்தியான்' மருந்து வாங்கியுள்ள நிலையில், மருந்தடிக்க ஆள்வராவில்லை என்றால், உடனே புகார் செய்யலாம். மழைகாலத்தில் மாநகராட்சியின் பிரதான பிரச்னையாக கொசுத்தொல்லை உள்ளது. மலேரியா, டெங்கு, சிக்குன் குனியா, மூளைக்காய்ச்சலுக்கு வழிவகுக்கிறது. பாதள சாக்கடை திட்டம் மற்றும் மழைநீர் வடிகால் திட்டம் பாதியில் நிற்பதால், நீர் தேக்கம் இந்த ஆண்டு அதிக அளவில் இருக்கும். படையெடுக்கும் கொசுக்களை கட்டுப்படுத்த, மாநகராட்சி நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ஜூலை 18 முதல் அக்., 18 வரை இதற்கான காலமாக கணக்கில் எடுக்கப்பட்டுள்ளது. கொசு ஒழிப்பு பணிக்கு தினக்கூலி அடிப்படையில், 60 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மண்டலத்திற்கு 15 பேர் என்ற ரீதியில், 'புகை மருந்து அடித்தல், வடிகால் சுத்தம், பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றும்,' பணிகள் மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக 10 லட்சம் ரூபாய் மதிப்பில், 3,000 லிட்டர் கொசுப்புழு மருந்து(மாலத்தியான்) வாங்கப்பட்டுள்ளது. மண்டல வாரியாக பிரிக்கப்பட்டு, பணிகள் தொடங்கியுள்ளன. உங்கள் பகுதியில் கொசு ஒழிப்பு பணிகள் நடைபெறாத பட்சத்தில் சுகாதார ஆய்வாளர்களிடம் புகார் செய்யலாம். வடக்கு(97888 10116), கிழக்கு(97888 10122), மேற்கு(93446 05443), தெற்கு(97888 10132). நடவடிக்கை இல்லாத பட்சத்தில், முதன்மை நகர்நல அலுவலர் அலுவலகத்தை அணுகலாம். கொசுத்தொல்லையை ஒழிக்க கிடைத்துள்ள வாய்ப்பை யாரும் தவறவிட வேண்டாம்.
முதன்மை நகர் நல அலுவலர் சுப்பிரமணியன் கூறியதாவது: கொசுத்தொல்லை ஏற்படாத வகையில் சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பணி நடைபெறாத பகுதிகள் குறித்து புகார் தெரிவிக்கலாம். பொதுமக்கள் ஓத்துழைப்பு அவசியம். வீட்டை சுற்றி சுகாதாரமாக வைக்க வேண்டும். குப்பைகளை அதற்கான தொட்டியில் போடவும். நீர் தொட்டிகளை திறந்து வைக்க வேண்டாம், என்றார்.