/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/நடு ரோட்டில் போலீசுக்கு அடி, உதை : உடுமலையில் திடீர் பரபரப்புநடு ரோட்டில் போலீசுக்கு அடி, உதை : உடுமலையில் திடீர் பரபரப்பு
நடு ரோட்டில் போலீசுக்கு அடி, உதை : உடுமலையில் திடீர் பரபரப்பு
நடு ரோட்டில் போலீசுக்கு அடி, உதை : உடுமலையில் திடீர் பரபரப்பு
நடு ரோட்டில் போலீசுக்கு அடி, உதை : உடுமலையில் திடீர் பரபரப்பு
உடுமலை : போக்குவரத்து விதிமுறைகளை மீறிய காரை தடுத்து நிறுத்திய போக்குவரத்து எஸ்.ஐ.,யை கீழே தள்ளி, மற்றொரு போலீசை மூன்று பேர் கும்பல் சராமரியாக தாக்கிய சம்பவம் உடுமலையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதை பார்த்த எஸ்.ஐ., கண்ணன் காரை நிறுத்தும்படி சைகை செய்துள்ளார். ஆனால், நிற்காமல் காரிலிருந்த நபர் கையை வெளியே நீட்டி எஸ்.ஐ., யை கீழே தள்ளியுள்ளார். இதை பார்த்த கான்ஸ்டபிள் ஜெயப்பிரகாஷ். தனது டூ வீலரில் காரை விரட்டினார். தளி ரோடு நூலகம் அருகே காரை மடக்கினார். அப்போது காரிலிருந்து இறங்கிய மூன்று பேர் நாங்கள் போலீஸ் அதிகாரியின் உறவினர்கள்; எங்களை தடுத்தால் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என கூறியவாறு பைக் சாவியை பிடுங்கியுள்ளனர். ஜெயப்பிரகாசையும் தாக்கினர். இதை பார்த்த சிலர் ஒடி வந்து போலீசை தாக்கிய இருவரை வளைத்து பிடித்தனர். ஒருவன் மட்டும் தப்பியோடியுள்ளான். காயமடைந்த ஜெயப்பிரகாஷை உடுமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். போலீசை தாக்கிய இருவரையும் கைது செய்து விசாரணை செய்ததில் உடுமலை நேரு வீதியை சேர்ந்த ரமேஷ்(42), கட்டுமானத்துறை காண்ட்ராக்டர், செல்லம் நகர் பகுதியை சேர்ந்த செந்தில்குமார்(38) என்பதும் தெரியவந்தது. இருவர் மீதும் கொலை முயற்சி வழக்கு மற்றும் அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தது ஆகிய பிரிவுகளில் உடுமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். உடுமலை டி.எஸ்.பி.,செந்தில் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்.


