/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/பாவூர்சத்திரத்தில் விழிப்புணர்வு பேரணிபாவூர்சத்திரத்தில் விழிப்புணர்வு பேரணி
பாவூர்சத்திரத்தில் விழிப்புணர்வு பேரணி
பாவூர்சத்திரத்தில் விழிப்புணர்வு பேரணி
பாவூர்சத்திரத்தில் விழிப்புணர்வு பேரணி
ADDED : ஜூலை 28, 2011 01:47 AM
பாவூர்சத்திரம் : பாவூர்சத்திரம் த.பி.சொக்கலால் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி என்.எஸ்.எஸ்.மாணவர்கள் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடந்தது.பாவூர்சத்திரம் த.பி.சொக்கலால் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
விழாவில் என்.எஸ்.எஸ். மாணவர்கள் சார்பில் கல்வி வளர்ச்சி விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரணிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் சம்பத்குமார் தலைமை வகித்து, துவக்கி வைத்தார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பொன்னையா முன்னிலை வகித்தார். என்.எஸ்.எஸ். திட்ட அலுவலர் சண்முகம் வரவேற்றார்.பேரணி பள்ளியிலிருந்து தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக வந்தது. பாவூர்சத்திரம் பஸ்ஸ்டாண்ட் அருகேயுள்ள காமராஜர் சிலைக்கு பள்ளியின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. விழா ஏற்பாடுகளை என்.எஸ்.எஸ். திட்ட அலுவலர் சண்முகம், ஆசிரியர் கணேசன் செய்திருந்தனர்.


