/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/சாம்பவர்வடகரையில் ஆக.8ல் உண்ணாவிரத போராட்டம்சாம்பவர்வடகரையில் ஆக.8ல் உண்ணாவிரத போராட்டம்
சாம்பவர்வடகரையில் ஆக.8ல் உண்ணாவிரத போராட்டம்
சாம்பவர்வடகரையில் ஆக.8ல் உண்ணாவிரத போராட்டம்
சாம்பவர்வடகரையில் ஆக.8ல் உண்ணாவிரத போராட்டம்
திருநெல்வேலி : சாம்பவர்வடகரையில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஆக.8ம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது.சாம்பவர்வடகரை அரசாள்வார் விநாயகர் கோயிலில் தினசரி பூஜை நடத்த வேண்டும்.
புதிதாக அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, அரசு நடுநிலைப்பள்ளி துவக்கப்பட வேண்டும்.பிறப்பு, இறப்பு பதிவாளர் அலுவலகம் முழுநேரம் செயல்பட வேண்டும். வறுமைக்கோடு பட்டியல் திருத்தப்பட வேண்டும். மாணவ, மாணவிகளுக்கு இடையூறாக இருக்கும் டாஸ்மாக் கடை அகற்றப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி சார்பில் அதன் மாவட்ட அமைப்பாளர் வைத்திலிங்கம் வரும் ஆக.8ம் தேதி சாம்பவர்வடகரை டவுன் பஞ்.,அலுவலகம் முன் உண்ணாவிரத போராட்டம் நடத்துகிறார்.இந்து மக்கள் கட்சி தொழிற்சங்க மாநில அமைப்பாளர் திருப்பதி, மாநில துணைத் தலைவர் குணசீலன், மாநில செயலாளர் ஞானசம்பந்தம் வாழ்த்தி பேசுகின்றனர்.


