/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/பாளை.,யில் மரபுசார்ந்த புழங்குப்பொருட்கள் சிறப்பு கண்காட்சிபாளை.,யில் மரபுசார்ந்த புழங்குப்பொருட்கள் சிறப்பு கண்காட்சி
பாளை.,யில் மரபுசார்ந்த புழங்குப்பொருட்கள் சிறப்பு கண்காட்சி
பாளை.,யில் மரபுசார்ந்த புழங்குப்பொருட்கள் சிறப்பு கண்காட்சி
பாளை.,யில் மரபுசார்ந்த புழங்குப்பொருட்கள் சிறப்பு கண்காட்சி
திருநெல்வேலி : நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் மரபுசார்ந்த புழங்குப்பொருட்கள் சிறப்பு கண்காட்சி துவக்க விழா நடந்தது.விழாவிற்கு நெல்லை தமிழ் வளர்ச்சிதுறை உதவி இயக்குநர் கல்யாணசுந்தரி தலைமை வகித்தார்.
ஆதிச்சநல்லூர் பொருநை நாகரீகத்தில் 130 வகையான மண்பாண்டங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் அருங்காட்சியகங்கள் செயல்பட்டு வருகின்றன. மண்பானையில் சமைப்பது, அம்மி கல்லில் மசாலா பொருட்களை அறைத்து குழம்பு வைத்து சாப்பிடுவது தனி சுவையை தரும். பனை பொருட்களில் இருந்து 30 வகையான பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. தென்மாவட்டத்தில் நாட்டார் வழக்காட்டார் பொக்கிஷங்கள் பல உயிர்ப்போடு உள்ளது. சிறப்பு வாய்ந்த பழமையான பொருட்களை பாதுகாப்பது ஒவ்வொருவரின் கடமையாகும்.
இதில் அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் கிருஷ்ணம்மாள் உட்பட பலர் கலந்து கொண்டனர். கண்காட்சியை ஏராளமான பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் உட்பட பலர் பார்வையிட்டனர்.இந்த கண்காட்சியில் பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்ட பல்வேறு விதமான அளவைகள், இசைக் கருவிகள், வெண்கல கும்பா, செப்புக்குடம், ஓலைப்பெட்டி, செட்டிநாடு கலை மற்றும் திருமண அலங்கார பொருட்கள், உலோக சீப்பு, மூங்கில் சீப்பு, நறுமண புகை குடுவை, ஐந்து சர செயின், சடங்கு பொருட்கள், பீரங்கி குண்டுகள், நூல் நூற்கும் இயந்திரம், மரப்பட்டை ஆடை, மர உரி தலைப்பாகை, வளரி, அஞ்சறைப்பெட்டி, ஒழுக்கறைப்பெட்டி, நகைப்பெட்டி, நெற்குதிர், எழுத்தாணி, மண்புட்டு குழல், உலைமூடி, உப்புமரவை, இரும்பு உறி, உரப்பெட்டி, அகப்பை தாங்கி, துருத்தி, மட்டை செருப்பு, மரச் செருப்பு, புத்தகம் தாங்கி, விளையாட்டு பொருட்கள், மரப்பொம்மைகள் உட்பட பல்வேறு பொருட்கள் இடம் பெற்றுள்ளன. இதுதவிர கரகாட்டம், பறையாட்டம், தேவராட்டம், ஒட்டன் துள்ளல், பாவை கூத்து, பொய்க்கால் குதிரை, செட்டிநாடு அரண்மனை உட்பட பல்வேறு பழங்கால பொருட்களை சித்தரிக்கும் போட்டோக்கள் இடம் பெற்றுள்ளன.இச் சிறப்பு கண்காட்சியை பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கண்டுகளிக்கும் வகையில் வரும் 31ம்தேதி மாலை 5மணி வரை நடக்கிறது.


