/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/பராமரிப்பு இல்லாத ரெட்டியார்பட்டி அரசு பள்ளி கட்டடம்பராமரிப்பு இல்லாத ரெட்டியார்பட்டி அரசு பள்ளி கட்டடம்
பராமரிப்பு இல்லாத ரெட்டியார்பட்டி அரசு பள்ளி கட்டடம்
பராமரிப்பு இல்லாத ரெட்டியார்பட்டி அரசு பள்ளி கட்டடம்
பராமரிப்பு இல்லாத ரெட்டியார்பட்டி அரசு பள்ளி கட்டடம்
ADDED : ஜூலை 28, 2011 01:48 AM
திருநெல்வேலி : பாளை.,ரெட்டியார்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியின் கட்டடம் போதிய பராமரிப்பு இல்லாததால் சன்சேடுகள் சேதமடைந்துள்ளதோடு, முள்செடிகள் வளர்ந்துள்ளது.பாளை., ரெட்டியார்பட்டி மெயின் ரோட்டில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
இதில் ரெட்டியார்பட்டி மற்றும் சுற்றுப்பகுதியை சேர்ந்த மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இதில் பழைய கட்டடத்தில் உள்ள வகுப்பறையில் விரிசல் விழுந்துள்ளதோடு, சன்சேடுகள் சேதமடைந்துள்ளன.மேலும் வகுப்பறையின் ஒரு சில ஜன்னல்கள் கரையான் அரிந்துள்ளதோடு, கற்கள் குவியல் மற்றும் முள் செடிகள் வளர்ந்துள்ளதால் புதர் மண்டி காட்சியளிக்கிறது. இதனால் சம்பந்தப்பட்ட வகுப்பறையில் பயிலும் மாணவ, மாணவிகள் அச்சத்துடன் கல்வி பயில வேண்டியுள்ளது.எனவே அதிகாரிகள் சம்பந்தப்பட்ட கட்டடத்தை முறையாக பராமரிப்பதோடு, முள் செடி, கற்கள் மற்றும் மண் குவியல்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


