/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/"குழந்தைத் திருமண' பாதிப்பு : இளம்பெண் தற்கொலை"குழந்தைத் திருமண' பாதிப்பு : இளம்பெண் தற்கொலை
"குழந்தைத் திருமண' பாதிப்பு : இளம்பெண் தற்கொலை
"குழந்தைத் திருமண' பாதிப்பு : இளம்பெண் தற்கொலை
"குழந்தைத் திருமண' பாதிப்பு : இளம்பெண் தற்கொலை
திருநெல்வேலி : கூடன்குளம் அருகே 'குழந்தைத்திருமணத்தால்' பாதிக்கப்பட்ட இளம்பெண் தற்கொலை செய்துகொண்டார்.இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:கூடன்குளம் அருகே சவுந்தரலிங்கபுரத்தை சேர்ந்த 17 வயது இளம்பெண்ணுக்கு கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதியை சேர்ந்த ஒருவருடன் திருமணம் நடந்தது.
தன்னுடன் படித்த தோழிகள் பள்ளிக்கு செல்வதை கண்டு அந்த பெண் ஏக்கமடைந்துள்ளார். தானும் பள்ளிக்கு செல்ல வேண்டும் என அவர் கூறிவந்தார். பெற்றோர் பள்ளியில் சேர்க்கவில்லை.மனமுடைந்த அந்த பெண் கடந்த 18ம்தேதி விஷம் குடித்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் நாகர்கோவில் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். பின்னர் திருவனந்தபுரம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் இறந்தார்.இதுகுறித்து கூடன்குளம் போலீசார் விசாரித்து வருகின்றனர். படிக்க வேண்டிய வயதில் திருமணம் நடந்ததால் மனமுடைந்து அந்த பெண் தற்கொலை செய்து கொண்டாரா, அவர் சாவுக்கு வேறு காரணங்கள் உள்ளதா என விசாரணை நடக்கிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


