/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ரூ.30க்கு ஆசைப்பட்ட பெண் ரூ.30,000 பறிகொடுத்த பரிதாபம்ரூ.30க்கு ஆசைப்பட்ட பெண் ரூ.30,000 பறிகொடுத்த பரிதாபம்
ரூ.30க்கு ஆசைப்பட்ட பெண் ரூ.30,000 பறிகொடுத்த பரிதாபம்
ரூ.30க்கு ஆசைப்பட்ட பெண் ரூ.30,000 பறிகொடுத்த பரிதாபம்
ரூ.30க்கு ஆசைப்பட்ட பெண் ரூ.30,000 பறிகொடுத்த பரிதாபம்
ADDED : ஜூலை 28, 2011 01:55 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் 30 ரூபாய்க்கு ஆசைப்பட்ட பெண்ணிடம் 30,000 ரூபாயை வாலிபர் பறித்து சென்றார்.
காவேரிப்பட்டணத்தை சேர்ந்தவர் காளியப்பன்.
இவரது மனைவி இந்திராணி (40). கிருஷ்ணகிரி அடுத்த பெரியமுத்தூரில் கிராம செவிலியராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று மதியம் கிருஷ்ணகிரியில் உள்ள வங்கியில் 30,000 ரூபாய் எடுத்தார். பணத்தை பையில்வைத்து மொபட்டில் மாட்டினார். கிருஷ்ணகிரி கார்நேஷன் திடல் எதிரே உள்ள கடையில் மொபட்டை நிறுத்திய போது, வாலிபர் ஒருவர் மூன்று பத்து ரூபாய் நோட்டுகளை கீழே வீசி விட்டு இந்திராணியிடம் உங்கள் பணம் கீழே கிடக்கிறது என்றார். தரையில் கிடந்த 30 ரூபாயை இந்திராணி எடுத்த போது, மொபட்டில் மாட்டியிருந்த 30,000 ரூபாய் இருந்த பையை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். கிருஷ்ணகிரி டவுன் போலீஸார் விசாரிக்கின்றனர்.


