காது கேளாத, பேச இயலாதவர்களுக்கான கருத்தரங்கு
காது கேளாத, பேச இயலாதவர்களுக்கான கருத்தரங்கு
காது கேளாத, பேச இயலாதவர்களுக்கான கருத்தரங்கு
ADDED : ஜூலை 28, 2011 05:57 PM
சென்னை: சென்னை அறிவியல் நகரில் காது கேளாத, பேச இலயாதவர்களுக்கான கருத்தரங்கு நடைபெற்றது.
சென்னை மருத்துவக் கல்லூரி ஈஎன்டி துறை இயக்குநர் டாக்டர் ஏ.முரளீதரன் இதைத் துவக்கி வைத்தார். இத்தகைய பாதிப்பு உள்ளவர்களுக்கான பல்வேறு அறிவியல் மற்றும் தொழில்நுட்பங்கள் குறித்து இந்த கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டது. அறிவியல் நகரின் துணைத்தலைவர் வி.கே.சுப்புராஜ் பேசுகையில், இந்திய மக்களில் 6 சதவீதம் பேர் இந்த பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். இவர்களில் 80 சதவீதம் பேர் லேசான பாதிப்பிற்கே ஆளாகி உள்ளனர். இந்தியாவில் பிறக்கும் ஒரு லட்சம் குழந்தைகளுக்கு இந்த பாதிப்பு இருக்கிறது என்றார். டாக்டர் முரளீதரன் பேசுகையில், இத்தகைய பாதிப்பு குறித்து முறையான விழிப்புணர்வை ஏற்படுத்தினால், 50 சதவீதம் பேர் இந்த பாதிப்பு ஏற்படாமல் தவிர்த்துக் கொள்ள முடியும் என்றார்.


