திருப்பூரில் பொது சுத்திகரிப்பு நிலையத்துக்கு ரூ. 200 கோடி
திருப்பூரில் பொது சுத்திகரிப்பு நிலையத்துக்கு ரூ. 200 கோடி
திருப்பூரில் பொது சுத்திகரிப்பு நிலையத்துக்கு ரூ. 200 கோடி
ADDED : ஜூலை 28, 2011 06:15 PM
சென்னை: திருப்பூரில் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க ரூ.
200 கோடியை கடனாக தமிழக அரசு வழங்குகிறது. சாயப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், திருப்பூரில் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க தமிழக அரசு ரூ. 200 கோடியை வட்டியில்லாத கடனாக வழங்கும் என முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று நடந்த முத்தரப்பு பேச்சுவார்த்தைக்குப்பின் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் சாயக்கழிவு நீரால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடாக ரூ. 18 கோடியை வழங்கவும் தமிழக அரசு ஒப்புக்கொண்டுள்ளது.