/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/பயன்பாட்டுக்கு வந்தது அங்கன்வாடி கட்டடம்!தினமலர் செய்தி எதிரொலிபயன்பாட்டுக்கு வந்தது அங்கன்வாடி கட்டடம்!தினமலர் செய்தி எதிரொலி
பயன்பாட்டுக்கு வந்தது அங்கன்வாடி கட்டடம்!தினமலர் செய்தி எதிரொலி
பயன்பாட்டுக்கு வந்தது அங்கன்வாடி கட்டடம்!தினமலர் செய்தி எதிரொலி
பயன்பாட்டுக்கு வந்தது அங்கன்வாடி கட்டடம்!தினமலர் செய்தி எதிரொலி
ADDED : ஜூலை 28, 2011 09:24 PM
பேரூர் : தினமலர் செய்தி எதிரொலி காரணமாக, வீணாகக் கிடந்த அங்கன்வாடி கட்டடம், கிராமப்புற குழந்தைகளின் பயன்பாட்டுக்கு விடப்பட்டது.
மாதம்பட்டி ஊராட்சி, பழனியாண்டவன்புதூர், ஆண்டாள் நகர் பகுதியில், 2009-10ம் நிதியாண்டில் ஊரக உள்கட்டமைப்பு திட்டத்தில், அங்கன்வாடி கட்டடம் கட்டப்பட்டது. மூன்று லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், கிராமப்புற குழந்தைகளின் பயன்பாட்டுக்காக, கட்டி முடிக்கப்பட்ட இக்கட்டடம், பயன்பாட்டுக்கு வராமல், புதர்மண்டி பாம்பு, பூச்சிகளின் புகலிடமாக மாறியது. இது குறித்து, கடந்த 18ம் தேதி தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து, கிணத்துகடவு எம்.எல்.ஏ., தாமோதரன் பயன்பாடின்றி கிடந்த, அங்கன்வாடி கட்டடத்தை திறந்து வைத்தார். இதையடுத்து, கிராமப்புற குழந்தைகள் அங்கன்வாடி மையத்துக்கு சென்று வருகின்றனர்.


