ADDED : ஜூலை 28, 2011 09:24 PM
கோவை : தமிழ்நாடு வேளாண் பல்கலையில் வரும் ஆக., 8ம் தேதி தேனீகளை
வளர்க்கும் முறை குறித்த பயிற்சி வகுப்பு நடக்கிறது.
பல்கலையில் வரும் ஆக.,
8ம் தேதி தேனீ வளர்ப்பு குறித்த ஒருநாள் பயிற்சி வகுப்பு நடக்கிறது.
ஆர்வமுள்ளவர்கள் பயிற்சி நாளான வரும் ஆக., 8ம் தேதி காலை 9.00 மணிக்குள்
தமிழ்நாடு வேளாண் பல்கலையின் வேளாண் பூச்சியியல் துறைக்கு வந்து, 150
ரூபாய் பயிற்சி கட்டணம் செலுத்தி பயிற்சியில் பங்கேற்கலாம்.
விபரங்களுக்கு, 'பேராசிரியர் மற்றும் தலைவர், வேளாண் பூச்சியியல் துறை,
தமிழ்நாடு வேளாண் பல்கலை வளாகம், மருதமலை ரோடு, கோவை - 641 003 என்ற
முகவரியிலோ அல்லது 0422 - 661 1214 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு
கொள்ளலாம்.இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


