ADDED : ஜூலை 28, 2011 09:27 PM
பொள்ளாச்சி : பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் குடும்ப கட்டுப்பாடுத்துறை
ஆலோசகர் ராகவன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
என்.ஆர்.எச்.எம்., சார்பில்
சென்னையிலிருந்து குடும்ப கட்டுப்பாடுத்துறை ஆலோசகர் ராகவன் பொள்ளாச்சி
அரசு மருத்துவமனைக்கு நேற்று காலை வந்தார். மருத்துவமனையில் குடும்ப
கட்டுப்பாடு அறை, ரத்த வங்கி, அறுவை சிகிச்சை தியேட்டர், பிரசவ வார்டு
போன்றவற்றை பார்வையிட்டார். பொள்ளாச்சி அரசு மருத்துவமனை அதிகாரிகள்
கூறியதாவது: இங்கு என்.ஆர்.எச்.எம்., சார்பில் அதிகாரி திடீர் ஆய்வு
செய்தார். இதில் மருத்துவமனையில் சுகாதாரம் நன்றாக உள்ளதா என்பது குறித்து
பார்வையிடப்பட்டது. இதில் ரத்த வங்கி, அறுவை சிகிச்சை அறை போன்றவை ஆய்வு
செய்யப்பட்டது. முக்கியமாக குடும்ப கட்டுப்பாடு அறை மற்றும் அனைத்து
துறைகளும் சரியாக பணியில் உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது,'
என்றனர். பொள்ளாச்சி அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் இளங்கோவன், தலைமை
செவிலியர்கள், ரத்த வங்கி டாக்டர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.


