நிலமோசடி: மாயாவதியின் சொந்த கிராம விவசாயிகள் கோர்டில் வழக்கு
நிலமோசடி: மாயாவதியின் சொந்த கிராம விவசாயிகள் கோர்டில் வழக்கு
நிலமோசடி: மாயாவதியின் சொந்த கிராம விவசாயிகள் கோர்டில் வழக்கு
ADDED : ஜூலை 29, 2011 03:07 AM
லக்னோ: உத்தரபிரதேச மாநிலத்தில் முதல்வர் மாயாவதியின் சொந்த கிராமத்தினைச் சேர்ந்த விவசாயிகள் தங்களது நிலம் சட்டவிரோதமாக அபகரி்க்கப்பட்டதாக கூறி அலகாபாத் ஐகோர்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் நொய்டா மற்றும் கிரேட் நொய்டா பகுதிகளில் விவசாய நிலங்கள் அம்மாநில அரசால் கையகப்படுத்தப்பட்டு மாநில வளர்ச்சி திட்டங்களுக்கு என கூறி பின்னர் குடியிருப்புகளுக்கும் ரியல்எஸ்டேட் அதிபர்களுக்கும் தாரை வார்க்கப்பட்டதாக புகார் எழுந்தது. இப்பிரச்னையை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கையில் எடுத்து போராடி வந்தனர். இதனால் முதல்வர் மாயாவதிக்கு சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில் முதல்வர் மாயாவதி பிறந்த சொந்த கிராமான கெளதம் புத்தா நகர் மாவட்டம் , பாதல்பூர் கிராமத்தைச்சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் நேற்று அலகாபாத் ஐகோர்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அதில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தங்களுக்கு சொந்தமான 300-க்கும் மேற்பட்ட ஹெக்டேர் விவசாய நிலங்கள் , நெடுஞ்சாலை உள்ளிட்ட வளர்ச்சிப்பணிகளுக்கு கையகப்படுத்தப்பட்டதாக கூறி , சட்டவிரோதமாக , தொழி்ற்சாலைகளுக்கு்ம், குடியிருப்புகளுக்கும் ஒதுக்கியுள்ளனர் என கூறியுள்ளனர். மேலும் சில விவசாயிகளுக்கு நியாயமான இழப்பீட்டுத்தொகையினையும், சில விவசாயிகளுக்கு குறைந்த இழப்பீட்டு தொகையினையும் வழங்கியுள்ளனர். தங்களுக்கு உரிய நிவாரணம் அளிக்க வேணடும் என கூறியுள்ளனர்.


