ஆப்கானில் வெடிகுண்டுதாக்குதல்: பி.பி.சி.நிருபர் உள்பட 22 பேர் பலி
ஆப்கானில் வெடிகுண்டுதாக்குதல்: பி.பி.சி.நிருபர் உள்பட 22 பேர் பலி
ஆப்கானில் வெடிகுண்டுதாக்குதல்: பி.பி.சி.நிருபர் உள்பட 22 பேர் பலி
ADDED : ஜூலை 29, 2011 04:50 AM
காபூல்: ஆப்கானிஸ்தானில் மூன்று இடங்களில்நடந்த தற்கொலைப்படை வெடிகுண்டு தாக்குதலில், பி.பி.சி.
டி.வி. நிருபர் உள்பட 22 பேர் பலியாயினர். ஆப்கானிஸ்தானின் உரூஸ்கான் மாகாணத்தில் தலிபான்களை வேட்டையாடுவதற்காக , நேட்டோப்படையினர், ஆப்கானிஸ்தான் ராணுவத்தினர் முகாமிட்டுள்ளனர். நேற்று டிரி்ன்கோட் எனும் நகரில் மூன்று முறை மனித வெடிகுண்டு தாக்குதல் நடந்தது. இத்தாக்குதலில் குழந்தைகள் மற்றும் இப்பகுதியில் செய்தி சேகரிக்க சென்ற ஆப்கான் பிரிவு பி.பி.சி. டி.வி நிருபர் ஓமித்கஹாவல்காக் என்பவர் உள்பட 22 பேர் பலியாயினர். மேலும் 35 பேர் படுகாயமடைந்தனர். இத்தாக்குதலுக்கு தலிபான்கள் பொறுப்பேற்றுள்ளனர். கடந்த 10 ஆண்டுகளாக இப்பகுதியில் தொடர்ந்து தாக்குதல்கள் நடந்து வருகின்றன. வரும் 2014-ம் ஆண்டிற்குள் அமெரிக்க தலைமையிலான பன்னாட்டுபடைகள் ஆப்கானை விட்டு வெளியேறவுள்ள நிலையில் தலிபான்கள் தாக்குதல் மேலும் தீவிரமடைந்து வருவது கவலையளிப்பதாக உரூஸ்கான் மாகாண கவர்னரின் செய்தி தொடர்பாளர் மிலாத் முடாஸர் கூறினார்.


