/உள்ளூர் செய்திகள்/கரூர்/"ரெக்கார்டு டான்ஸ்'க்கு தடை கரூர் மாவட்ட போலீஸார் அதிரடி"ரெக்கார்டு டான்ஸ்'க்கு தடை கரூர் மாவட்ட போலீஸார் அதிரடி
"ரெக்கார்டு டான்ஸ்'க்கு தடை கரூர் மாவட்ட போலீஸார் அதிரடி
"ரெக்கார்டு டான்ஸ்'க்கு தடை கரூர் மாவட்ட போலீஸார் அதிரடி
"ரெக்கார்டு டான்ஸ்'க்கு தடை கரூர் மாவட்ட போலீஸார் அதிரடி
ADDED : ஜூலை 31, 2011 01:02 AM
கரூர்: கரூர் மாவட்டத்தில் பொது நிகழ்ச்சியை காரணம் காட்டி ரெக்கார்டு டான்ஸ், குத்தாட்டம் போன்ற கிளு கிளுப்பு டான்ஸ் ஆட போலீஸார் தடை விதித்துள்ளனர்.
இதற்காக நகரில் போலீஸார் 'ப்ளஸ் பேனர்' வைத்துள்ளனர்.கரூர் மாவட்டத்தில் குக்கிராமங்களில் உள்ள கோவில்களில் கலைநிகழ்ச்சியாக இரவு நேரத்தில் ரெக்கார்டு டான்ஸ், ஆண்களும் பெண்களும் ஜட்டியுடன் டான்ஸ் ஆடுவதும், நடன பெண்கள் தலைக்கேறிய போதையில் குத்தாட்டம் போன்ற டான்ஸ்கள் நிகழ்ச்சி கடந்த சில மாதங்களுக்கு முன் நடந்தது.எவ்வளவு தான் போலீஸார் கண்காணிப்பில் ஈடுபட்டாலும் கோவில் நிகழ்ச்சி என்ற போர்வையில் இதுபோன்ற ஆபாச நடனங்களை கட்டுபடுத்த முடியாமல் தவித்து வருகின்றனர். காரணம், ஆபாச டான்ஸ் குறித்து போலீஸாருக்கு தகவல் கொடுக்க சம்பந்தப்பட்ட ஊரில் யாரும் முன்வருவதில்லை. ஏதாவது சட்டம் ஒழுங்கு பிரச்சனை தலைதூக்கும் போ து ஆபாச டான்ஸ் குறித்து போலீஸாரின் காதுகளுக்கு தகவல் கிடைக்கிறது. அதுவும் ஆபாச டான்ஸ் முடிந்த பின்போ அல்லது ஒரு நாள் கழித்தோ தெரியும் நிலையில் போலீஸார் நடவடிக்கை எடுக்க முடிவதில்லை.இதனால், கரூர் மாவட்டம் முழுவதும் அந்தந்த போலீஸ் கட்டுபாட்டில் உள்ள அனைத்து பகுதிகளிலும் இதுபோன்ற டான்ஸ் நிகழ்ச்சிகளுக்கு தடை விதித்து போலீஸார் ப்ளக்ஸ் பேனர் வைத்துள்ளனர்.
அதில், திருவிழாக்கள் மற்றும் கோவில் நிகழ்ச்சி நடைபெறும் நாட்களில் கலைநிகழ்ச்சி, இன்னிசை கச்சேரி, ஆடல்பாடல் போன்ற நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி கிடையாது என மாவட்ட எஸ்.பி., அறிவித்துள்ளதாக அனைத்து போலீஸ் ஸ்டேஷன் முன் ப்ளக்ஸ் பேனர் வைக்கப்பட்டுள்ளது.ப்ளக்ஸ் பேனர் வைக்கப்பட்டுள்ளதால் கோவில் திருவிழா போன்ற பொது நிகழ்ச்சிகளில் கலைநிகழ்ச்சி என்ற பேச்சுக்கே இடமில்லை. அதற்கு அனுமதியும் கிடையாது.இதுபோன்ற நிகழ்ச்சிக்கு அனுமதி கேட்டு யாரும் வருவதில்லை, ஆனாலும், குறிப்பிட் ட சில கிராமங்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என போலீஸார் தெரிவித்தனர்.


