/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/பள்ளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் பூர்த்தி செய்யப்படும் கலெக்டர் தகவல்பள்ளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் பூர்த்தி செய்யப்படும் கலெக்டர் தகவல்
பள்ளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் பூர்த்தி செய்யப்படும் கலெக்டர் தகவல்
பள்ளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் பூர்த்தி செய்யப்படும் கலெக்டர் தகவல்
பள்ளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் பூர்த்தி செய்யப்படும் கலெக்டர் தகவல்
ADDED : ஜூலை 31, 2011 01:03 AM
கிருஷ்ணகிரி: ''கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும், ஒரு மாத காலத்துக்குள் அடிப்படை வசதிகள் செய்து தரப்படும்,'' என கலெக்டர் மகேஸ்வரன் கூறினார்.யூனிசெஃப் நிறுவனத்தின் சார்பில், சுகாதார மற்றும் சுத்தக்கல்வி கண்காணிப்பு மற்றும் நட்சத்திர தகுதி வழங்குதல் குறித்த பங்கேற்பு அடிப்படையிலான திட்டமிடல் குறித்து கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பயிற்சி பட்டறை நடந்தது.கலெக்டர் மகேஸ்வரன் பயிற்சி பட்டறையை தொடங்கி வைத்து பேசியதாவது:கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பள்ளி சுகாதாரம் மற்றும் சுத்தக் கல்வி கடந்த, 2005ம் ஆண்டு முதல் யூனிசெஃப் நிறுவனத்தின் உதவியுடன் செயல்படுத்தப்படுகிறது.
கல்விக்குழு உறுப்பினர்களான வட்டார வளமைய மேற்பார்வையாளர், உதவி தொடக்க கல்வி அலுவலர், கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர், வட்டார வளமைய ஆசிரியப் பயிற்றுனர்கள், மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர் ஆகியோருக்கு சுகாதாரம் மற்றும் சுத்தக்கல்வி குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது.பயிற்சியின் மூலம் அறிந்து கொண்டதை ஆசிரிய பயிற்றுனர்கள், மாணவர்களுக்கும், பயிற்சி வழங்கும் ஆசிரியர்களுக்கும் தெரிவிக்க வேண்டும். இந்த பணிகளை கண்காணிக்க, புதிய இணையதளம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பள்ளிகளில் செயல்படுத்தப்படும் பள்ளி சுகாதாரம் மற்றும் சுத்தக்கல்வி குறித்து யூனிசெஃப் மற்றும் முதன்மை கல்வி அலுவலர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்வார்கள். இது போன்ற தொடர் முயற்சிகளின் விளைவாக மாவட்டத்தில் உள்ள பள்ளிகளின் தரம் மேம்படுத்தப்பட்டுள்ளது.கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கழிப்பிடம் இல்லாத பள்ளிகள், கழிப்பிடத்திற்கு தண்ணீர் வசதி இல்லாத பள்ளிகள், குடிநீர் வசதி இல்லாத பள்ளிகள் கணக்கெடுக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் அடிப்படை வசதிகள் அனைத்தும் ஒரு மாத காலத்துக்குள் செய்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.ஆசிரியர்கள் பள்ளி சுகாதாரம் மற்றும் சுத்தக்கல்வியை மாணவர்களுக்கு எடுத்துக்கூறி அதிக அளவிலான பள்ளிகள் நட்சத்திர அந்தஸ்தை பெற சிறப்பாக செயல்படவேண்டும்.இவ்வாறு பேசினார்.மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மூர்த்தி, உதவி திட்ட அலுவலர்கள் பாலையா, பன்னீர் செல்வம், யூனிசெஃப் ஆலோசகர் வேலுசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


